செய்தி ஊடகங்களில் வரும் தகவல்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் அதே சமயத்தில் உண்மையான நேர்மையான தகவல்களை செய்தி ஊடகங்கள் அளிக்க வேண்டும். மக்கள் முழு நம்பிக்கையுடன் அந்த செய்தியை தெரிந்து கொள்ள வேண்டும். இது அனைத்து வாசகர்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்த தளத்தில் ஒட்டுமொத்தமாக தமிழில் நேர்மையான செய்திகளை பகிர்கின்றோம். இந்த தளத்தின் முழு நோக்கமானது மக்களுக்கு பயனுள்ள செய்திகளை சரியாக கொண்டு சேர்ப்பது தான்.
நடந்த நிகழ்வை மக்கள் அறிந்து கொள்ளும் ஆர்வம் தான் செய்தி ஊடகங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தது. எங்கோ நடந்த நிகழ்வுகளை இங்கிருக்கும் மக்கள் தெரிந்து கொள்ள விவாதிக்க ஆசைப்பட்டார்கள் அதன் நோக்கமே படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு செய்தி ஊடகமானது மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதுவும் தமிழில் தகவல்களை தெரிந்து கொள்ள அனைவருக்கும் விருப்பமானதாக இருக்கும்.
தமிழில் தகவல்களை தெரிந்து கொள்வது பிற மொழிகளில் நாம் தகவல்களை தெரிந்து கொள்வதை விட நம் மனதிற்கு பக்கத்தில் இருக்கும். எனவே தமிழில் நல்ல தகவல்களை தொடர்ந்து வழங்க நமது ஆசிரியர் குழு பணியாற்றும்.
பொதுவாக எந்தவிதமான செய்திகள்
நமக்குத் தேவை என்பதில் நாம் தான் கவனம் செலுத்த வேண்டும் ஏனென்றால் சில செய்திகளை
தெரிந்து கொள்ளாவிட்டால் நமக்கு எந்த பாதிப்பும் வராது.
சில வகையான செய்திகளை கண்டிப்பாக
நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் அரசாங்கம் புதிதாக ஒரு சட்டத்தை
இயற்றியிருக்கும் அல்லது இனிமேல் இது போன்ற செயலுக்கு அபராதம் என்கின்ற புதிய
செய்திகள் வந்திருக்கும்.
அவை அனைத்தையும் பற்றியும் நாம்
தெரிந்து கொள்ளாமல் இருக்கும்போது நாம் பாதிப்பு அடைய நேரிடலாம். எனவே நமக்கு
முக்கியமான செய்திகளை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த வலைதளம் நீங்கள் கண்டிப்பாக
தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்திகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறது.