மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறையிடம் தமிழ்நாட்டில் இருந்து கடந்த ஓராண்டாக புதிய தொழில் தொடங்குபவர்கள் பதிவு செய்துள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 10000 தாண்டி உள்ளது.
அப்படியானால் தமிழக இளைஞர்களிடம் ஒரு வேலைக்கு செல்வதை
விட தொழில் தொடங்குவதில் தான் ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள
முடிகிறது. இன்றைய காலத்தில் புதிதாக தொழில் தொடங்க பல்வேறு வாய்ப்புகள்
இருக்கின்றது.
குறிப்பாக மத்திய அரசாங்கம் மற்றும் மாநில
அரசாங்கத்திடமிருந்து இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு பல்வேறு வகையில் கடன்
கிடைக்கிறது. இதனால் புதிதாக தொழில் முனைவோர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
புதிய தொழில் தொடங்கக்கூடிய எண்ணம் இளைஞர்களுக்கு
அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை அலசி ஆராய்ந்து தான் தெரிந்து கொள்ள
முடியும்.
புதிய தொழில் இளைஞர்கள் தொடங்குவதற்கான காரணங்கள்
ஒரு வேலைக்குச் சென்று தினசரி கட்டுப்பாடான
சூழ்நிலையில் 8 மணி நேரம் பணியாற்றுவது மற்றும் ஷிப்ட் முறையில் பணியாற்றுவது என்பது
இளைஞர்களுக்கு மிகவும் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்துவதாக உணரலாம்.
அதுவும் குறிப்பாக 5 லிருந்து 10
ஆண்டுகள் வரை தொடர்ந்து ஒரு பணிக்கு சென்று வருவது என்பது காலை ஷிப்ட் மற்றும்
இரவு ஷிப்ட் என்று மாறி மாறி பணியாற்றுவதும் இளைஞர்களுக்கு மன உளைச்சலை தரக்
கூடியதாக இருக்கலாம்.
சொந்தமாக தொழில் தொடங்கி அதே அளவு வருமானமும் அல்லது
அதைவிட குறைந்து வருமானமும் வந்தாலும் சரி என்கின்ற நோக்கில் அவர்கள் புது தொழில்
தொடங்குவதில் ஆர்வம் காட்டலாம்.
அதேபோல தற்பொழுது வரக்கூடிய வருமானம் மிக குறைவாக
இருக்கிறது, மேற்கொண்டு நிறைய வருமானம் வேண்டும் என்ற நோக்கில் புதிய தொழில்
தொடங்கப்படுகிறது.
தொழில் தொடங்குவதால் மட்டுமே நாம் கோடீஸ்வரராக, நினைத்ததை விட
மிகப்பெரிய பணக்காரனாக ஆக முடியும் என்கின்ற கருத்து நிலவுவதால் புதிய தொழில்
தொடங்குவதில் இளைஞர்களிடம் ஆர்வம் இருக்கின்றது.
நிறைய கடன் வாங்கி வைத்திருக்கும் பட்சத்தில் ஒரு
பணிக்கு சென்று மட்டும் அந்த கடனை அடைக்க முடியாத சூழ்நிலையில், புதிய தொழில்
தொடங்குவதால் நம்முடைய கடன்களை அடைக்க வழி கிடைக்கும் என்று இளைஞர்கள் கருதலாம்.
தொழில் தொடங்குவதற்கு நிறைய வாய்ப்புகளை மத்திய மாநில
அரசாங்கள் ஏற்படுத்துவதால் புதிய தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் இங்கே
அதிகரித்திருக்கலாம்.
புதிய தொழில் தொடங்குவதற்கு நிறைய பயிற்சிகள்
அரசாங்கத்திடமிருந்து தற்காலத்தில் வழங்கப்படுவதால், அந்த ஆர்வம் அவர்களுக்கு மேலோங்கி
இருக்கலாம்.
மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக மத்திய
மற்றும் மாநில அரசாங்கங்கள் அரசு பணி மற்றும் தனியார் பணி என்று பணிவாய்ப்புகளை
உருவாக்குவது மட்டும் வேலை வாய்ப்பின்மையை பூர்த்தி செய்து விடாது. அதனால் புதிய
தொழில் தொடங்குவதால் அதிகமான வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்கின்ற நோக்கில்
மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் நிறைய
தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதாலும் அவர்களுக்கு கடன் அளிப்பதாலும் புதிய
தொழில் தொடங்குகின்ற ஆர்வம் அதிகரித்திருக்கலாம்.
ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்றால் வங்கியில் இருந்து
கடன் பெறுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல ஆனால் தற்பொழுது தனியார்
வங்கிகள் தொழில் முனைவோருக்கு கடன் அளிப்பதில் ஆர்வம் காட்டுவதால் இளைஞர்களிடம்
தொழில் தொடங்குவதிலும் ஆர்வம் அதிகரித்து இருக்கலாம்.
இப்படி பல்வேறு காரணங்களால் புதிய தொழில் தொடங்குகின்ற
ஆர்வம் தமிழக இளைஞர்களிடம் அதிகரித்து இருக்கிறது.
2025 ஆம் ஆண்டில் தொழில் முனைவோர்களுக்கான வாய்ப்புகள்
2025 ஆம் ஆண்டில் இது போன்ற புதிய தொழில் தொடங்கக்கூடிய ஆர்வம் மேலும்
அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஆண்டில் பத்தாயிரத்திற்கும்
மேற்பட்ட புதிய தொழில் தொடங்கப்பட்ட பட்சத்தில் கடந்த ஆறு மாதங்களில் புதிதாக
தொழில் தொடங்குபவர்கள் பதிந்துள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்
கொண்டுதான் வருகிறது.
எனவே 2025 புதிய தொழில் தொடங்குவதற்கான விழிப்புணர்வு மற்றும் கடன் பெறுதல் பற்றிய
புரிதல் ஆகியவை அதிகரிப்பதால் மேலும் புதிய தொழில்கள் முனைவர்களின் எண்ணிக்கையும்
அதிகரிக்கலாம். கடந்த 2 ஆண்டுகளாக தான் தொழில் முனைவோர்கள்
அதிகரித்து வருகிறார்கள் அதனால் 2025 ஆம் ஆண்டிலிருந்து
மேலும் பல தொழில் முனைவோர்கள் உருவாவதற்கான சூழல் இங்கே அதிகரித்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திடமிருந்து பெறக்கூடிய
கடனுதவி, மிகக் குறைந்த வட்டி வீதம் மற்றும் தொழில் தொடங்குவதற்கான பயிற்சி முறைகள்
இவற்றை பிரபலமாக்கி உள்ளதால் பலரும் தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் காட்டலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாடு
திட்டம் என்கின்ற திட்டம் இருக்கிறது. முதல் தலைமுறையில் தொழில் தொடங்குவதற்கான
வாய்ப்புகள் நிறைவே உருவாகியுள்ளது. முதல் தலைமுறையினர் தொழில் முனைவராக
உருவாவதற்கு அரசாங்கம் ஊக்குவிக்கிறது. அவர்கள் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த
தொழிலை தொடங்கும் பட்சத்தில் இது போன்ற முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு
கிட்டத்தட்ட ஐந்து கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
புதிய தொழில் முனைவோர்கள் பெறும் கடன் உதவியில் அரசின்
மானியம் தான் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இருக்கின்றது. தொழில் முனைவோர்களின்
திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. எனவே புதிய தொழில் முனைவோர்கள்
அரசின் மானியத்தில் தொழில் தொடங்குவதால் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தொழிலை
ஊக்கமுடன் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. தொடர்ந்து தவணைகள் மாறாமல்
கடனை திருப்பி செலுத்தும் நம்பிக்கை உள்ள தொழில் முனைவோர்களுக்கு வட்டி
விகிதத்திலும் மானியம் வழங்கப்படுகிறது.
பெண்கள் தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவே
இருக்கின்றது. பெண் பட்டதாரிகள் தொழில் முனைவோர்களாக உருவாகும் பட்சத்தில்
அவர்களுக்கு வாரம் தோறும் பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிற. இந்த பயிற்சி
திட்டங்களை நிறைவு செய்யக்கூடிய தொழில் முனைவோர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு
கடன் பெறக்கூடிய மற்றும் மானியத்தில் கடன் பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக
இருக்கின்றது.
கிராமப்புற இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கும், சுய உதவி
குழுக்கள் மூலம் தொழில் தொடங்குவதற்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் நிறைய
கடன் உதவி கிடைக்கின்றது. எனவே அனைத்து தரப்பட்ட இளைஞர்களுக்கும் தொழில்
தொடங்குவதற்கான சூழல் 2025 ஆம் ஆண்டில் உருவாகி இருக்கிறது.


