குளிர் காலத்துக்கு ஏற்ற புதுமையான உணவு வகைகள்.

பொதுவாக குளிர் காலத்தில் வானிலை மாற்றம் இருப்பதால் உடலின் உஷ்ணம் செயல்பாடுகள் பல்வேறு மாற்றங்களை அடைகின்றன. குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தில் உடலின் வெப்பம் கொஞ்சம் குறைகிறது.

எனவே உடலின் வெப்பத்தை தக்க வைத்துக் கொள்வது அவசியமாகின்றது. குளிர்காலத்திற்கென்று ஆரோக்கியமான உணவுகளை, மற்ற பருவ காலங்களை விட புதிதாக மாற்றி அமைத்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும்.

குளிர்காலத்தில் உடலின் வெப்பநிலை குறைவதால் அதை அதிகரிப்பதற்காக கொலஸ்ட்ரால், கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் இருக்கின்ற உணவை எடுத்துக் கொள்வது நல்லது. சில உணவு வகைகளை நாம் சாப்பிடும் போது உடலின் வெப்பநிலையை அதிகரிக்க கூடும், இதன் மூலம் ஜீரண சக்தி நமக்கு கிடைக்க உதவுகின்றது.

குளிர் காலத்திற்கு ஏற்ற உணவுகள்

வாழைத்தண்டு பொதுவாக உடலின் உஷ்ணத்தை அதிகரிக்க கூடியதாகும். குளிர்காலத்தில் நமக்கு ஜீரண சக்தி அதிகம் தேவைப்படுவதால் உடலின் உஷ்ணத்தை சமநிலையில் வைப்பதற்கு வாழைத்தண்டு பொரியல் சாப்பிடுவது நல்லது.

கேழ்வரகில் அடை செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்கும். பொதுவாக சிறுதானியங்களில் நல்ல சத்துக்கள் இருப்பதால் நமக்கு குளிர்காலத்தில் இது போன்ற சிறுதானியத்தில் அடை செய்து சாப்பிடுவது நல்லது.

சுக்கு, மிளகு, இஞ்சி, திப்பிலி மல்லி மற்றும் கருப்பட்டி   போன்றவை போட்டு தயாரிக்கும் சுக்கு காபி குளிர் காலத்திற்கு மிகவும் சிறந்த குளிர் கால பானமாகும். சூடான இந்த பானத்தை அருந்துவது மூலம் சளி, ஜலதோஷம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் இருந்து விடுபடலாம்.

தூதுவளைச் சாறை கொண்டு தூதுவளை கஞ்சியை தயாரிக்கும் உணவுகள் ஜலதோஷம் மற்றும் சளிக்கு குணப்படுத்துவதாக இருக்கின்றது.

அசைவ வகைகளில் மட்டன் கொஞ்சம் உடலுக்கு குளிர்ச்சி என்பதால் குளிர் காலத்தில் சிக்கன் மற்றும் நாட்டுக்கோழி போன்ற அசைவ வகை உணவுகளை சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.

பொதுவாக குளிர் காலத்தில் காரசாரமான உணவுகள் சூடான பானங்கள் ஆகியவை சாப்பிடப்பட்டாலும், மருத்துவ ரீதியாக உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் சுக்கு மற்றும் தூதுவளை போன்ற மூலிகை உணவுப் பொருட்களை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

பாரம்பரிய தமிழ் உணவு வகைகள் எப்பொழுதுமே சிறந்ததாகவே இருக்கின்றது. பழைய முறை சமையலில் இருந்து தற்போது சமைக்கும் முறை வரை சில உணவுகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றது. அதில் பலரும் சாப்பிடும் உணவுகள் பாரம்பரிய  உணவுகளாக இருந்தாலும் இப்பொழுது அதை மக்கள் காலத்திற்கு ஏற்ப சாப்பிடுவதால் மிகவும் புதுமையானதாகவே கருதப்படுகிறது.

குளிர் காலத்தில் சிறப்பாக செய்து சாப்பிட சூடான கஞ்சி அதுவும் சிவப்பரிசி மற்றும் கருப்பு அரிசியில் செய்த கஞ்சி அதனுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு ஏற்றார் போல கேரளா ஸ்டைலில் கடலை மசாலா, சுட்ட அப்பளம் மற்றும் நார்த்தங்காய் ஊறுகாய். இந்த காம்பினேஷனில் காலை உணவு இருக்கும் பட்சத்தில் நமக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும், குளிர் காலத்திற்கு ஏற்ற உணவும் கிடைக்கும்.

சில புதுமையான பாரம்பரிய குளிர்கால உணவுகள்

கடலை மிளகாய் பொடி, எள்ளு மிளகாய் பொடி, கருப்பட்டி கஞ்சி, நெல்லிக்காய் கஞ்சி, பாசிப்பருப்பு பாயாசம், நாட்டுக்கோழி மிளகு வறுவல், மிளகு துவையல், தூதுவளை ரசம், கொள்ளு ரசம், ஆட்டுக்கால் சூப், சுக்கு காபி, தூதுவளை தேநீர், மசாலா தேநீர், இஞ்சி தேன் சேர்த்த கருப்பு தேநீர் மற்றும் இஞ்சியில் தேநீர் குடிப்பது குளிர் காலத்திற்கு மிகவும் இதமானது.

கருத்துரையிடுக

புதியது பழையவை