நாமும் வாக்யூம் கிளீனிங் ரோபோட் பயன்பாட்டிற்கு மாறலாம்.


ஆயிரம் மின்னனு சாதனங்கள் கண்டுபிடிக்கலாம் ஆனால் அதற்காக நாம் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்றோ அல்லது பெரிய தொகை கொடுத்து வாங்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை.

உண்மையில் அந்த மின்னணு சாதனங்கள் நமக்கு பயன்படுகிறதா? என்று பார்க்க வேண்டும். அப்படி பயன்படும் பட்சத்தில் நம்முடைய வாழ்க்கை நவீனமாகவும், எளிதாகவும் இருக்கும். நிச்சயமாக இதை கருத்தில் கொண்டு தான் நாம் புதிய மின்னணு சாதனங்களை வாங்க வேண்டும்.

ஒரு கண்டுபிடிப்பு நவீனமாக இருந்தால் மட்டும் போதாது அது நமக்கு பயன்படும் விதத்திலும் இருந்தால் தான் அது பரவலாக மக்களால் விரும்பி வாங்கப்படும். இந்த வாக்யூம் கிளீனிங் ரோபோட்டும் ஒரு புதிய நவீன பயன்பாடு தான். பலருக்கும் இது தேவையா என்கின்ற எண்ணம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

ஒரு மின்னணு சாதனம் என்பது உங்கள் வாழ்க்கை முறைக்கும் உங்கள் வீட்டில் சூழ்நிலைக்கும் ஏற்றது போல இருக்க வேண்டும். நீங்கள் வாக்யூம் கிளீனர் ரோபோட்டை வாங்க வேண்டும் என்றால் அதற்கு சரியான காரணங்கள் வேண்டும்.


நீங்கள் ஏன் வாக்யூம் கிளீனிங் ரோபோட் வாங்க வேண்டும்?

உங்கள் வீடு மிகப் பெரிதாக, உங்களால் நிர்வகிப்பதற்கும் சுத்தம் செய்வதற்கும் கடினமானதாக இருந்தால் நிச்சயம் நீங்கள் இந்த வாக்யூம் கிளீனிங் ரோபோட் வாங்கிக் கொள்ளலாம்.

இது போன்ற நவீன தொழில்நுட்பத்தால் தினசரியும் உங்கள் வீடுகளை சுலபமாக சுத்தம் செய்ய முடியும். என்னதான் நாம் சுத்தம் செய்தாலும் அல்லது ஒரு பணியாளரை நியமித்து சுத்தம் செய்ய வைத்தாலும் மூலை முடுக்குகளில் இருக்கக்கூடிய தூசி, குப்பை இவற்றை 100% அகற்றுவது இல்லை. இதனால் தான் வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சி போன்றவை தங்குவதற்கு எளிதாகி விடுகின்றது.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட சுகாதாரமான சூழ்நிலையில் நீங்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டால் நிச்சயம் இது போன்ற வாக்யூம் கிளீனிங் ரோபோட்டை வாங்கிக் கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கை முறையும் நவீனதாக, மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றுமானால் நீங்கள் இதை வாங்குவது சிறந்தது.

வாக்யூம் கிளீனிங் ரோபோட் வீட்டில் தூசி, குப்பை இல்லாமல் சுத்தம் செய்வதுடன் வீட்டை கழுவவும் செய்கின்றது. அதை நீங்கள் உங்களுக்கு ஏற்றது போல மாற்றிக் கொள்ள முடியும். இது செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டு செயல்படுவதால் தன்னைத்தானே சார்ஜ் செய்து கொள்ளும். அதேபோல் படிக்கட்டுகளில் விழுந்து விடாது, தடைகளை கவனித்து அதற்கு ஏற்றார் போல் செயல்படும்.

உங்களுடைய வீட்டின் தரை டைல்ஸ், கிரானைட் என எப்படி இருந்தாலும் சரி தரையின் சூழ்நிலைக்கு ஏற்ப சுத்தம் செய்யும் திறன் வாய்ந்ததாக இருக்கின்றது. நீங்கள் டெட்டால் மற்றும் வாசனையுள்ள பினாயில் ஊற்றி துடைக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு ஏற்றார் போல், எந்த நாளில், எந்த நேரத்தில் துடைக்க வேண்டுமோ வீட்டை முழுவதும் துடைக்கும் திறன் வாய்ந்ததாக இருக்கின்றது.

நீங்கள் இந்த வாக்கும் கிளீனிங் ரோபோட்டை உங்களது அலைபேசி மூலம் முழுவதும் கட்டுப்படுத்த முடியும். இதனால் எங்கிருந்தாலும் உங்கள் வீட்டின் சுத்தம் நிரந்தரமாகிறது.

ஒருவேளை மிகப்பெரிய வீடு வைத்திருக்கிறீர்கள், அதற்கு எப்போதாவது வந்து போகிறீர்கள் என்றால், வீட்டில் அதிகப்படியான தூசிகள் அடைவதாக இருக்கும். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கிருந்தே அலைபேசி மூலம் உங்கள் வீட்டை சுத்தம் செய்யும்படி கட்டளைகள் பிறப்பிக்கலாம். நீங்கள் வந்து உபயோகிக்கும் போது வீடும் சுத்தமாக, தூசி இல்லாமல் இருக்கும்.


வாக்யூம் கிளீனிங் ரோபோட் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

உங்கள் தரைக்கு ஏற்றார் போல் இந்த வாக்யூம் கிளீனிங் ரோபோட் இருக்கிறதா என்பதை முதலில் கவனியுங்கள்.

இது செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டதால் தன்னைத்தானே சார்ஜ் செய்யக்கூடியது இருந்தாலும் அந்த பேட்டரியின் ஆயுள் எவ்வளவு மணி நேரம் என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம்.

குப்பைகளை சேகரித்து வைத்துக் கொள்ளும் பகுதியானது எவ்வளவு பெரியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்கள் வீட்டின் அளவுக்கு ஏற்றார் போல இதனை நீங்கள் பயன்படுத்த முடியும்.

அலைபேசி மூலம் இதை இணைத்து பயன்படுத்த முடியுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அப்பொழுதுதான் நீங்கள் எங்கிருந்தாலும் இதனை இயக்க முடியும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை