தமிழின்
தொன்மையை ஏத்தகையதோ,
தமிழரின் அறிவியலும்
அத்தகைய தொன்மையானது.
கணிதத்திலும் தமிழர்கள்
சிறந்து விளங்கினார்கள்
அன்றைய காலகட்டத்தில்
தமிழர்கள் பயன்படுத்திய
கணித முறையை
தற்பொழுது எண்ணிப்
பார்த்தால் மெய்சிலிர்க்க
வைக்கிறது. இன்று
இருக்கும் நவீன
கணித முறைக்கே
அன்றையே அடிக்கல்
நாட்டியவர்கள் தமிழர்களே!
எண்
கணிதம் பற்றிய
பண்டைய தமிழர்களின்
சிந்தனையோட்டம் பிற
நாட்டினரை விட
மிகச் சிறப்பாக
சிறந்தது என்றும்
பண்டைய தமிழ்
எண்முறையின் அடுத்தகட்ட
வளர்ச்சியே இன்றைய
எண் முறை
என்றும் பல
ஆய்வுகள் வழி
நாம் அறிகின்றோம்.
ஒன்று
முதல் 9 வரையிலுள்ள
ஒன்பது குறியீடுகளையும்
பத்து, நூறு,
ஆயிரம் முதலியவற்றிற்கு
தனித்தனியே குறியீடுகளையும்
கொண்டு எந்த
ஒரு எண்ணையும்
10, 100, 1000 இவற்றின் இரு
மடங்குகள் ஆக்கி
அம்மடங்கை குறியீடுகளுக்கு
இடப்பக்கம் எழுதும்
முறையில் அமைந்த
பழந்தமிழர்களது எண்
முறையே இன்றைய
இந்திய அரேபிய
எண்முறையின் படிப்படியான
சீரமைப்புக்கு சான்று
பகிர்கிறது என்று
புகழ்மிக்க கணித
வரலாற்று அறிஞர்
அம் போல்ட்
கூறுகின்றார்.
இன்று
சுழி, சூனியம்,
வெற்று, பூஜ்யம்,
ஜீரோ என்று
பல பெயர்களால்
அழைக்கப்படும் சைபர்
எண்னை சங்க
இலக்கியம் 'பாழ்' என்று
குறிப்பிடத் தொடங்கி
தமிழ் எண்களை
குறித்து ஒரு
பாடல் வழி
அறிவிக்கின்றது.
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பின்.
----பரிபாடல்.
இந்தப்
பாடலின் வரிகள்
பாதியை அதாவது
அரை என்னை
பாகு என்றும்
ஒன்பதை தொண்டு
எனவும் அக்கால
வழக்கில் எண்ணுப்
பெயர்கள் சுட்டுகிறது.
ஒன்று இரண்டு அலவ
---பதிற்றுப்பத்து
வேலி ஆயிரம் விளைக
---புறநானூறு
கோடிபல அடுக்கிய பொருள் நமக்கு உதவிய
---புறநானூறு
இந்த
பாடல்கள் எண்களை
குறித்து கூறுகின்றன
எனவே ஒன்று
முதல் கோடி
வரையிலான எண்களைக்
குறித்து பழந்தமிழர்கள்
அறிந்தவற்றை நமக்கு
உறுதியாக்கும் விதமாக
இந்த சங்க
இலக்கியம் சான்றாக
உள்ளது.
இலக்கியங்களும், கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளும், செப்பேடுகளும் நமக்கு மிகையான சான்று. சங்க காலத்திலேயே இச்சொல்லாட்சி வடிவம் பெற்று இன்றுவரை நம் பயன்பாட்டில் உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும்
ஒன்றினை பல
கூறுகள் ஆக்கி
கணக்கிடும் கீழ்
வாயிலக்க வாய்ப்பாடு
வரையிலும் அவர்கள்
அறிந்திருந்ததை இலக்கியங்களை
நமக்கு எடுத்துக்
கூறுகின்றன.
தமிழரின்
கணக்கியல் திறமையை
வெளிக்கொணரும் ஒரு
நூலான 16ஆம்
நூற்றைச் சார்ந்தன
கருதப்படும் 'கணக் கதிகாரம்' என்னும்
ஒரு நூல்
மட்டும் முழுமையாக
கணக்கியலை வெளிப்படுத்தும்
ஒரு நூலாக
வெளிவந்துள்ளது. காரி
நாயனார் என்பவர்
அதை எழுதியவர்
ஆவார் அதன்
உரையாசிரியர் வ.
சுப்பையா என்பவர்
ஆவார்.
'ஏரம்பம்'
‘கிளராலயம்’ ‘அதிகாரம்’
‘கலம்பகம்’ ‘திருபுவன
திலகம்’ ‘கணித
ரத்தினம்’ ‘சிறு
கணக்கு’ என்று
பல கணித
நூல்களை சங்க
இலக்கியவாதிகள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் அந்த
நூல்கள் காலத்தால்
அழிந்து போனவையாக
கருதப்படுகின்றன.
'ஆஸ்தான கோலகலம்' என்கின்ற அக்காலத்தில் எழுதப்பட்ட கணித நூலும் கிடைத்துள்ளது. இன்று உலகம் முழுவதிலும் நடைமுறையில் இருக்கும் இந்திய அரேபிய எண் முறைக்கு அடிப்படை எண்களாக திகழ்ந்தவை பண்டைய தமிழ் எண்களே என்பதை 'மொழி வரலாறு' என்கின்ற புத்தகத்தில் மு. வரதராஜனார் 1985 ஆம் ஆண்டு வெளியிட்டு தமிழின் பெருமையை உலகறிய செய்தார்.

