ஜாதகத்தில் இந்த பஞ்ச மகா புருஷ யோகம் இருந்தால் என்ன பலன்கள்.


 ஐந்து விதமான யோகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் வாழ்வில் வெற்றி அடைய சிறந்ததாக கூறப்படுகிறது. இந்த யோகங்கள் ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும் பட்சத்தில் அவர் ஏதாவது ஒரு துறையில் மிக மேன்மையாக வெற்றி பெற்றவராக மற்றும் சக்தி வாய்ந்த மனிதராக இருப்பதற்கான பல சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இது போன்ற யோகங்கள் ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில் அவர் ஏதாவது ஒரு துறையில் சாதனையாளராக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ருசக யோகம்

செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பது  ருசக யோகம் என்று கூறப்படுகிறது. இந்த யோகம் ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் போது அவர் காவல்துறை, ராணுவம் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் சாதிக்க தகுந்தவராக அந்த துறைகளில் வெற்றியாளராக இருப்பார், அது மட்டுமல்லாது செவ்வாய் சுபத்துவம் பெற்று அமையும் பட்சத்தில் நிச்சயம் அவர் மருத்துவராக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது, அதேபோல் நிறைய நிலம் வைத்திருப்பதாகவும் கட்டிட பொறியாளராகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது,

ஹம்ச யோகம்

குரு ஆட்சியோ  உச்சமோ பெற்று லக்கினத்திற்கு அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பது ஹம்ச யோகம் என்று கூறப்படுகிறது. இந்த அம்ச யோகம் ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் பட்சத்தில் குருவினால் அவர் மிக மேன்மையான வாழ்க்கையை வாழ்பவராக இருப்பார். குரு அவருடைய லக்னத்திற்கு அல்லது ராசிக்கு நன்மை பயக்கும் கிரகமாக இருக்கும் பட்சத்தில் அவருடைய காரத்துவத்தின்படி வங்கி மேலாளர், ஆசிரியர், நீதிபதி போன்ற உயர் பொறுப்புகளை வகிக்கும் நிலையில் அந்த ஜாதகர் இருப்பார். வருமானம் அதிகமாக தரக்கூடிய தொழிலில் ஈடுபடுவார். மிகப்பெரிய தொழில் செய்யும் முதலாளியாகவும் தங்க நகை வியாபாரம் செய்பவராகவும் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மாளவியா யோகம்

லக்னத்திற்கு ராசிக்கும் கேந்திரத்தில் உச்சம் பெற்றோ அல்லது ஆட்சி பெற்றோ அமையும் பட்சத்தில் இந்த மாளவியா யோகம் மிகச் சிறந்த அளவில் அவருக்கு வாழ்வில் வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். கலைத்துறைகளில் மிகப்பெரிய வெற்றி அடைந்தவர்கள் இது போன்ற மாளவியா யோகத்தில் பிறந்தவர்களே ஆகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் சினிமா மற்றும் அனைத்து விதமான கலை துறைகளில் மிக பிரபலமான மனிதராக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த யோகத்தின்படி அவருக்கு அதிகமான பணம் செல்வாக்கு போன்றவை கிடைக்கும். சுக்கிரனுடைய காரத்துவத்தின்படி பொழுதுபோக்கு, சினிமா போன்றவற்றில் போன்ற துறைகளில் அவர் இருக்கும் பட்சத்தில் அந்தத் துறையில் மிகப்பெரிய வெற்றியடைய கூடிய யோகத்தை இந்த மாளவியா யோகம் தரும்.

பத்திர யோகம்

புதன் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பது பத்ரா யோகம் என்று கூறப்படுகிறது. இந்த யோகம் ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில் அவர் அதி புத்திசாலியாக அதிமேதாவியாக இருப்பார். கணிதத்தில் மிகுந்த திறன் வாய்ந்தவர் ஆகவும் இருப்பார். பொதுவாக சாட்டட் அக்கவுண்ட் முடித்த ஆடிட்டர்கள் இதுபோன்ற பத்ரா யோகத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆராய்ச்சியாளராகவும் மிகப்பெரிய சிந்தனையாளராகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. பெரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கக்கூடிய புத்திசாலிகள் இதுபோன்ற பத்திராயோகத்தில் பிறக்கிறார்கள்.

சச யோகம்

சனி லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெறுவது சச யோகம் என்று கூறப்படுகிறது. சனி அங்கே சுபத்துவம் அடையும் பட்சத்தில் அவர் சனியின் காரத்துவத்தின்படி கெமிக்கல் மற்றும் இரும்பு போன்ற தொழில்களில் மிகப்பெரிய வெற்றியாளராக இருப்பார். சனி அவருடைய ஜாதகத்தில் சுபத்துவம் அடையாத பட்சத்தில் மிகச் சாதாரணமான பணிகளையே செய்யக்கூடியவராக இருப்பார். சசயோகத்தில் சனி சுபத்துவ வலுப்பெற்று இருக்கும் பட்சத்தில் மிகப்பெரிய முதலாளியாகவும் உலகளாவிய தொழில் செய்ய முடியும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை