வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற இரண்டு அணிகளை வெற்றி பெற்ற முனைப்புடன் இந்திய அணி இன்று நியூசிலாந்து அணி உடன் சாம்பியன்ஸ் டிராபியின் மூன்றாவது ஒருநாள் போட்டியை (02/03/2025) சந்திக்கின்றது. இதுவரை இந்திய அணி வெற்றி பெற்ற இரண்டு அணிகளை விட நியூஸிலாந்த அணி மிகுந்த போட்டியை தரக்கூடியதாக இருக்கும்.
அதனால் இந்திய அணியில் சில மாறுதல்கள் ஏற்பட்டு
இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா காயம்
காரணமாக அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைப்போல் முகமது சாமிக்கு பதிலாக ஹர்திப் சிங் பந்து வீசுவார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் போட்டிகளின் கிங்காக இருக்கக்கூடிய கோலி
மிடில் ஆடர் பேட்டிங்கில் ஒரு முக்கிய பங்காற்றுவார் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு போட்டிகளில் இந்திய அணி ஆடும் 11 வீரர்களில்
எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை.
ஏனென்றால் அந்த இரண்டு அணிகளையும் எளிதாக வெற்றி
பெற்று விடலாம் என்கின்ற நம்பிக்கை இருந்தது. தற்போது விளையாட உள்ள நியூசிலாந்து
அணியுடன் அதிகமான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆடும் 11 பேர்களில்
மாற்றம் தேவை என்று மாற்றப்பட்டிருக்கிறதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா
சாம்பியன் டிராபியின் அரையிறுதிக்கு
செல்வது உறுதியாகிவிட்டாலும் நியூசிலாந்து உடனான இந்த போட்டி என்பது மிகுந்த
கவனத்தை கொண்டுள்ளது.
ஏனென்றால் கடந்த சில போட்டிகளாக இந்தியா சந்தித்து
வந்த ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி உடன் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணியுடன் தோல்வியை
சந்தித்திருந்தது.
ஆப்கானிஸ்தான் அணியிடம் இடம் தோற்றுப் போன இங்கிலாந்து
அணியிடம் மட்டும் தான் வெற்றி வாகை சூடப்பட்டிருந்தது. அதனால் நியூஸிலாந்து போன்ற
வலுவான அணியுடன் விளையாடும்போது இந்திய வீரர்களின் திறமை மற்றும் வெற்றி வாய்ப்பு
ஆகியவை கணிப்பதற்கு இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எப்படியும் சாம்பியன்ஸ் டிராப்பியின் அரையிறுதியில்
இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சவுத்
ஆப்பிரிக்கா போன்ற அணிகள் கலந்து கொள்வது உறுதியாகிவிட்டது. இதில் இந்திய அணி இறுதிப்போட்டியை வெல்லும் முனைப்புடன்
தயாராகிக் கொண்டிருக்கின்றது. இந்திய அணியில் பேட்டிங் பலத்துடன் இருப்பதால் எந்த
ஒரு ஸ்கோரையும் ஷேஸ் செய்யும் திறமையுடன் இருக்கிறது.
அதே சமயம் முதல் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 300 ரன்களுக்கு மேல்
எடுத்து எதிரணிக்கு அழுத்தத்தை தரும் அளவுக்கு பேட்டிங் ஆர்டர் இருக்கிறது.
குறிப்பாக மிடில் ஆடரில் ஆடக்கூடிய ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அக்சர் பட்டேல்
சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதே சமயத்தில் விராட் கோலி கவனமாக விளையாடும்
பட்சத்தில் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் 100
ரன்கள் எடுக்கக்கூடிய பேட்ஸ்மனாக திகழ்கிறார். அவர் சரியாக
விளையாடும் பட்சத்தில் இந்திய அணி தற்போது உள்ள எந்த அணியையும் வெற்றி கொள்ள
முடியும். இதேபோன்று சுப்பன்ஹில் சராசரியாக ஒவ்வொரு போட்டியிலும் நிதானமாக ரன்களை
சேர்க்கக் கூடியவராக இருக்கிறார்.
அதிரடியாக விளையாடுவதற்கு ஹர்திக் பாண்டியா மற்றும்
ரவீந்திர ஜடேஜா இருப்பது அணிக்கு கூடுதல் பலம். இதையெல்லாம் தாண்டி ஆட்டத்தின்
எந்த ஒரு நிலையிலும் அதன் போக்கை மாற்றக்கூடிய ஒரு பேட்ஸ்மனாக ரிஷப் பண்டு
கருதப்படுகிறார். அவர் விளையாடும் பட்சத்தில் அணிக்கு கூடுதல் பலமாக
கருதப்படுகிறது. இருந்தாலும் இந்த போட்டியில் ஆடும் 11 பேர்கள் யார்
என்பது போட்டி தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக தான் தெரியவரும்.
