2025 ஆம் ஆண்டில் TNPSC நடத்தப்பட உள்ள தேர்வுகள்

2025 ஆம் ஆண்டில் டிஎன்பிசி யில் பல்வேறு விதமான வேலைகளுக்கான அறிவிப்புகள் வர இருக்கின்றன. குரூப் 4 முதல் குரூப் 1 வரையிலான அனைத்து பணிகளுக்குமான தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி நடத்தி இருக்கிறது. குரூப்-1 முதன்மை தேர்வினை ஜூன் மாதத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறது. அதேபோல் ஜூலை மாதத்தில் குரூப் 4 தேர்வையும், செப்டம்பர் மாதத்தில் குரூப் 2 தேர்வையும் நடத்தவிருக்கிறது.

இந்த மூன்று தேர்வுகளுக்கு தான் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் அதிகமாக ஆயத்தமாகிறார்கள். இவை அனைத்தும் முக்கியமான நிர்வாக பணிகளுக்கான தேர்வு என்பதால் டிஎன்பிசி தேர்வு எழுதக்கூடிய தேர்வுகள் இந்த மூன்று தேர்வுகளில் முக்கிய கவனம் செலுத்துகிறார்கள். இதைத் தாண்டி நேர்முக தேர்வுகளுடன் கூடிய தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வையும் ஜூலை மாதத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறது.

தொழில்நுட்ப வேலை வாய்ப்பு பொறுத்தவரை நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத வேலை வாய்ப்புகள் என இரண்டு வகையில் டிஎன்பிசியில் உருவாக்கப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கான தேர்வையும் ஆகஸ்ட் மாதத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறது. தேர்வுடன் கூடிய தொழில்நுட்ப பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

ஐடி டிப்ளமோ படித்தவர்கள் இது போன்ற தொழில்நுட்ப தேர்வு எழுத முடியும். ஆகஸ்ட் மாதத்தில் தொழில்நுட்ப பணிகளுக்கான  தேர்வுகளும் டிஎன்பிஎஸ்சி யில் நடக்க உள்ளது. இதைத் தாண்டி இந்த வருட கடைசியில் டிசம்பர் மாதம் குரூப் VA தேர்வுகளும் நடத்த  டிஎன்பிசி திட்டமிட்டு இருக்கிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை