வெளிநாட்டில் இருந்து தங்கம் வாங்கி வந்தால் லாபமா?


ஒரு நாட்டில் தங்கத்தின் விலை உயர்வதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டுடைய கலாச்சாரமாகும். மக்கள் எந்த அளவுக்கு தங்க நகை பயன்படுத்துகிறார்களோ அதை வைத்தும் மேலும் உலகளாவிய பொருளாதார சூழ்நிலை காரணமாகவும் தங்கத்தின் விலை அந்த நாட்டில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த அடிப்படையில் இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது.

காரணம் மக்கள் தங்க நகையை ஒரு முதலீடாவும், அதே சமயத்தில் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவும் இருப்பதுதான். ஆனால் ஒரு சில நாடுகளில் தங்க நகைகளை அவர்களின் கலாச்சாரத்தோடு இணைந்து இருப்பதில்லை. மேலும் சிலர் இதை ஒரு முதலீடாக மட்டுமே கருதுகிறார்கள்.

எனவே தங்க காசுகள் வாங்குவதை மட்டும் சில நாடுகளில் விரும்புகிறார்கள். அதனால் அந்த நாடுகளில் தங்கத்தின் விலை குறைவாக இருக்கின்றது. அப்படியானால் அந்த நாடுகளில் தங்கத்தை வாங்கி இந்தியாவுக்கு வந்தால் அதிக வேலைக்கு விற்கலாம் என்று கற்பனை கூட செய்ய  முடியாது. ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட அளவு தான் தங்க நகைகளை வரி இல்லாமல் எடுத்துச் செல்ல முடியும்.

ஒவ்வொரு நாடும் விதித்திருக்கின்ற தங்கதின் அளவை தாண்டி எடுத்துச் செல்லும் போது சுங்கவரி கண்டிப்பாக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தியா வருபவர்கள் ஆண்கள் 20 கிராம் தங்க நகைகளை வைத்துக் கொள்ளலாம். அதுவே பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளை வைத்துக் கொள்ள முடியும். உங்கள் குழந்தைகளும் வரும்போது இதே அளவான தங்கத்தை நகைகளாக அணிந்திருக்கலாம்.

இந்த தங்க நகைகள் கொண்டு வரும் வரம்பு ஆறு மாதத்திற்கு ஒரு முறையாக இருக்க வேண்டும். ஒருமுறை தங்க நகைகளை கொண்டு வந்து விட்டு ஆறு மாதத்திற்குள் மீண்டும் இந்தியாவுக்கு தங்க நகைகளுடன் வந்தால் அதற்கு சுங்க கட்டணம் 38.5% ஆக விதிக்கப்படும். எனவே நீங்கள் ஒரு முறை இந்தியா வந்த பிறகு மீண்டும் இந்தியாவிற்குள் அதே அளவு தங்க நகைகளுடன் வர வேண்டும் என்றால் ஆறு மாதங்கள் இடைவெளி இருக்க வேண்டும். இந்த நகைகளுக்கு சுங்க வரி செலுத்த தேவையில்லை.

இதைத் தாண்டி நீங்கள் தங்க நகைகளை கொண்டு வரலாம் ஆனால் அதற்கு சுங்க வரி செலுத்த வேண்டும். 20-50 கிராம் அளவுக்கு தங்க நகைகள் அதிகமாக வைத்திருந்தால் 3% சுங்க வரியும், 50-100 கிராம் அளவுக்கு தங்க நகைகள் வைத்திருந்தால் 6% சுங்கவரியும் 100 கிராமுக்கு மேலாக தங்க நகைகள் வைத்திருந்தால் 10% சுங்க வரியும் செலுத்த வேண்டும்.

 


இந்தியாவை விட அமெரிக்காவில் தங்க நகைகளின் விலை குறைவாக தான் இருக்கும். இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய் அளவில் தங்க நகைகள் அமெரிக்காவில் குறைவாகத்தான் இருக்கும். அதனால் குறைந்த அளவு நீங்கள் அமெரிக்காவிலிருந்து தங்க நகைகளை வாங்கி வரும் பட்சத்தில் உங்களுக்கு ஒரு கணிசமான தொகை லாபமாக கிடைக்க வாய்ப்பு உண்டு. அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும்போது பல பொருட்களை வாங்க ஆசைப்படுவீர்கள் அத்துடன் சேர்த்து கொஞ்சம் தங்க நகைகளும் வாங்கிக் கொண்டு வந்தால் அதுவும் உங்களுக்கு சிறு லாபமாக இருக்கலாம்.

இதை தாண்டி பல நாடுகளில் தங்கத்தின் விலை குறைவாக இருக்கின்றது காரணம் அந்த நாடுகளில் தங்க நகைகளை பெண்கள் அணிவதில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. துபாய், கத்தார், இந்தோனேஷியா, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் இந்தியாவை விட தங்கத்தின் விலை குறைவாக தான் இருக்கும்.

எனவே இந்த நாடுகளில் இருக்கக்கூடிய இந்தியர்கள் தற்பொழுது இந்தியாவில் தங்கத்தின் விலை மற்றும் நீங்கள் இருக்கக்கூடிய நாட்டில் தங்கத்தில் விலை ஆகியவற்றில் இருக்கும் வித்தியாசத்தை பார்த்துவிட்டு, இந்திய அரசாங்கம் சுங்கவரி விதிக்காத அளவுக்கு குறைந்த நகைகளை வாங்கி வரலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை