சர்க்கரை உற்பத்தி சரிந்துள்ளதால் ஏற்படப்போகும் மாற்றங்கள்.


இந்தியாவில் தற்பொழுது சர்க்கரையின் உற்பத்தி 14 சதவீதம் குறைந்துள்ளதாக சென்றம் (centrum) என்கின்ற அமைப்பானது தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரும்பின் சீசன் காலகட்டத்தில் போன வருடம் இருந்த உற்பத்தியை விட இந்த வருடம் 0.48 கோடி மெட்ரிக் டன் அளவு குறைந்திருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. கடந்த ஆண்டு கரும்பு சீசனில் 3.18 கோடி மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது ஆனால் நடப்பாண்டில் கரும்பு சீசனின் மொத்த சர்க்கரை உற்பத்தி 2.70 கோடி மெட்ரிக் டன்னாக குறைந்து இருக்கிறது.

இதற்கான காரணங்கள்

மத்திய அரசாங்கம் எத்தனால் விலையை உயர்த்திருக்கிறது இதனால் கரும்பு சாரிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்வதை விட எத்தனால்  உற்பத்தி செய்வது அதிகரித்து இருக்கிறது. கரும்பு எத்தனால் உற்பத்திக்கு மாற்றப்படுவதால் சர்க்கரை உற்பத்தி சரிவு கண்டிருக்கிறது.

பெட்ரோல் தேவையை சமாளிப்பதற்காகவும், காற்று மாசுவை எத்தனால் கலக்கும்போது குறைக்க முடியும் என்பதாலும் பெட்ரோலுடன் எத்தனால் கலந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 2025 ஆண்டில் எத்தனால் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது இதனால் உற்பத்தியாளர்கள் கரும்பை   சர்க்கரையாக மாற்றுவதை விட எத்தனாலாக மாற்றுவதில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதால் எத்தனால் உற்பத்தியை அதிகரித்து சர்க்கரையின் உற்பத்தியை குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: 2025 ஆண்டில் கால நிலையில் எதிர்கொள்ளப் போகும் சவால்கள்.

தற்பொழுது பெட்ரோலில் 90% பெட்ரோலும் 10% எத்தனாலும் கலக்கப்பட்டு வருகிறது ஆனால் 2023 ஆம் ஆண்டிலிருந்து பதினோரு மாநிலங்களில் 80 சதவீதம் பெட்ரோலும் 20% எத்தனாலும் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் 80% பெட்ரோலும் 20% எத்தனாலும் கலக்கப்பட்டு விற்பனை செய்யும் நோக்கில் மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால் எத்தனாலின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுவும் சர்க்கரை உற்பத்தி குறைவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

சர்க்கரையின் விலை உயரும் போது உருவாகும் பிரச்சனைகள்

சர்க்கரை என்பது அத்தியாவசிய உணவுப் பொருளாக இருப்பதால் விலை அதிகரிப்பால் செலவினங்கள் அதிகரிக்கும்.

இனிப்பு பொருட்களின் விலை உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. பேக்கரி மற்றும் சர்க்கரை சார்ந்த உணவுப் பொருட்களின் விலையும் கணிசமாக உயரலாம்.

சர்க்கரையை இனிமேல் குறைவாக பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது தான் ஆனால் தேவைப்படுபவர்களுக்கு விலை அதிகரிப்பால் சிரமப்பட வாய்ப்புண்டு.

கருத்துரையிடுக

புதியது பழையவை