2025 ஆண்டில் கால நிலையில் எதிர்கொள்ளப் போகும் சவால்கள்.

2024 ஆம் ஆண்டு முடிய போகிறது புத்தாண்டு தொடங்கப் போகின்றது. வருகிற 2025 ஆம் ஆண்டு பற்றியும் 2024 ஆம் ஆண்டில் நாம் என்ன செய்தோம் என்றும் பலரும் இணையதளத்தில் நகைச்சுவையான மீம்ஸ் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஆண்டின் தொடக்கத்தில் நாம் இந்த வருடம் பெரிதாக சாதித்து விடுவோம் என்கின்ற எண்ணம் இருக்கும். அதுவே ஆண்டின் முடிவில் நாம் இந்த வருடத்திலும் எதுவும் சாதிக்கவில்லையே என்கின்ற முடிவுக்கு நாம் தள்ளப்படுகின்றோம்.

ஆண்டின் தொடக்கமோ இறுதியோ எதையும் முடிவு செய்து விடுவதில்லை, டிசம்பர் 31 கடைசி நாளும் இல்லை ஜனவரி ஒன்றாம் தேதி தொடக்க நாளும் இல்லை ஆனால் இந்த தத்துவம் வாழ்க்கைக்கு பொருந்தும் தட்பவெப்ப நிலைக்கும், கால நிலைக்கும் பொருந்தாது. ஏனென்றால் அடுத்து வரப் போகின்ற 2025 ஆம் ஆண்டு தட்பவெப்ப நிலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆண்டாக இருக்கும் என்கிறது அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை ஆராய்ச்சி.

சூரியனின் வெப்பமானது அதன் முழு பரப்பளவிலும் ஒரே வெப்ப நிலையில் இருக்காது. ஒரு இடத்தில் கூடுதலாகவும் மற்றும் குறைவாகவும் இருக்கும். குறைவாக சூரியனின் வெப்பநிலை இருக்கும் பகுதிகளை சூரிய கரும்புள்ளிகள் என்று அழைக்கிறார்கள்.

இந்த சூரியனின் கரும்புள்ளிகளின் பக்கத்தில் தான் சூரியத் தீக்கொழுந்து இருக்கும். சூரிய கரும்புள்ளிகள் சில காலகட்டத்தில் கூடுதலாகவும் மற்றும் சில காலகட்டத்தில் குறைவாகவும் இருக்கும். எப்பொழுது சூரியனின் கரும்புள்ளிகளின் அளவு கூடுகிறதோ அப்பொழுது பூமியில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரிக்கும்.

பதினோரு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனின் வெப்பம் அதிகரிப்பும் சூரியனின் வெப்பம் குறைவும் சுழற்சி முறையில் நடக்கின்றது. 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சூரியனில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளின் அளவு அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கரும்புள்ளிகள் அதிகரிக்கும் பட்சத்தில் சூரியனின் வெப்ப தாக்குதல் பூமியில் அதிகரிக்கும். சூரிய வெப்ப கதிர்வீச்சால் பூமியில் இருக்கக்கூடிய தட்பவெப்ப நிலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கும்.

சூரிய கதிர்வீச்சின் வெப்ப தாக்குதலால்  மக்களின் உடல்நிலையில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் சூரிய வெப்ப கதிர்வீச்சில் இருந்து மக்கள் தங்களை பாதுகாப்பது அவசியம். கண்கள் மற்றும் தோலை பாதுகாப்பது மிகவும் அவசியம் ஆகும்.

அதே சமயத்தில் இதைப் பற்றி மிகப்பெரிய அளவுக்கு உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படுமோ என்று நாம் பயப்பட தேவையில்லை. ஏனென்றால் வளிமண்டலத்தின் பாதுகாப்பில் நாம் இருப்பதால் சூரியனின் வெப்ப கதிர்வீச்சிலிருந்து நம்மால் நிச்சயம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சூரியனின் இந்த அதிகமான வெப்ப கதிர்வீச்சால் தொலைத்தொடர்பு பாதிக்கப்படும் என்றும் வானொலி சேவைகள் பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். மின்சாரத்தை அனுப்புவதற்கான மின் வழித்தடங்களில் உள்ள மின் கம்பிகள் அதிகப்படியான வெப்பத்தால் பாதிக்கப்படுவதால் மின்சார சேவைகள் பாதிக்கப்படும் மற்றும் ரயில் தண்டவாளங்கள் அதிகமான வெப்பத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் போது ரயில் சேவைகள் பாதிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை