கேமிங் மற்றும் வீடியோ குவாலிட்டி சிறப்பாக இருக்கும்
படியாக உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. தற்காலத்தில் மொபைல்
பயன்படுத்துபவர்கள் வீடியோ குவாலிட்டி அதிகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்
பலரிடம் இருக்கிறது.
ஒரு கேமராவை வாங்கி அதில் வீடியோ மற்றும் போட்டோ
எடுப்பதை விட இது போன்ற அதிநவீன சிறந்த கேமரா திறன் இருக்கக்கூடிய மொபைலை
வாங்குவதில் பலரும் விருப்பம் காட்டுகிறார்கள். இதை புரிந்து கொண்டு தான் சிறந்த
வீடியோ குவாலிட்டி இருப்பது போன்ற மொபைலை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதன் பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு கேமரா, டெலிபோட்டோ லென்ஸ் என அனைத்தும் 50 எம்பி அளவில்
இருக்கின்றது. செல்பி கேமரா மட்டும் 32 எம்பி அளவில் இருக்கிறது.
இந்த மொபைல் ஃபோனை நீண்ட நேரம் பயன்படுத்த முடியும் ஏனென்றால் 60,000 எம்ஏ ஹெச் அளவுக்கு பேட்டரி திறன் இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 வெர்சன் மற்றும் 5ஜி போனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொஞ்சம் கனமான எடை கொண்ட மொபைலாக இருக்கிறது மேலும் பயன்கள் அதிகம் என்பதால் விலையும் கொஞ்சம் கூடுதலாக தான் இருக்கிறது. 15 ஜிபி ரேம் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் வேகமாக இருக்கும்.
256
ஜிபி முதல் 512 ஜிபி வரை ரோம் நிரந்தர
சேமிப்பு இருக்கின்றது. அதனால் எக்ஸ்டர்னல் மெமரி கார்டு தேவை இருக்காது. நிறைய
போட்டோ மற்றும் வீடியோ எடுப்பவர்கள், அதை சேமித்து வைத்துக்
கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மொபைல் பயன்படும் விதத்தில் இருக்கும்.
அதிகம் பயன்படுத்தினாலும் ஒரு நாள் முழுவதும் சார்ஜ்
நிற்கும் வகையில் இதன் பேட்டரி திறன் இருக்கின்றது. குறிப்பாக மொபைலில் கேம்
விளையாடுவதற்கும் மற்றும் வீடியோக்களை சேமித்து வைத்துக் கொள்வதற்கும் தகுந்த
வகையில் இந்த மொபைல் உருவாக்கப்பட்டுள்ளது.
