எந்த ஒரு படிப்பையும் சிறப்பாக படிப்பவர்களுக்கு நிச்சயமாக நல்ல வேலை வாய்ப்புகள் இருக்கத்தான் செய்யும். குறிப்பிட்ட ஒரு துறையில் மட்டும் தான் வேலை வாய்ப்புகள் இருக்கிறது என்று இல்லை ஆனால் பொதுவாக மென்பொருள் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றது.
மேலும் அதிக
சம்பளமும் வழங்கப்படுவது தான் 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் மென்பொறியல் படிக்க வேண்டும் என்பதுதான்
பலரின் விருப்பமாகவும் இருக்கிறது.
மென்பொருள் படித்தவுடன் நிச்சயமாக உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் நிறைய
வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே நாம் குறிப்பிட்டவாறு எந்த ஒரு
துறையிலும் அதில் சிறந்து விளங்க கூடிய அளவில் நாம் கற்றுக் கொண்டால் மட்டுமே நாம்
நினைத்தது போன்ற வேலைவாய்ப்பினை பெற முடியும்.
பொதுவாக மென்பொருள் பணியாளர்களுக்கு ஆரம்பத்தில்
குறைந்த சம்பளம் வழங்கப்பட்டாலும் அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ளும்
பட்சத்தில் லட்சத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மென்பொருளில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பைதான் , ஜாவா, சி++, எஸ் கியூ எல், டேட்டா அனாலிசிஸ் போன்ற திறன்கள் அதிகமாக தேவைப்படுகின்றது.
சாப்ட்வேர்
டெவலப்பர்கள்
மென்பொருள் துறையில் பொதுவாக அதிக சம்பளம் வாங்குபவர்கள் சாப்ட்வேர் டெவலப்பர்கள் தான். ஒரு மென்பொருளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறார்கள், மென்பொருள் மட்டுமல்லாது வலைதளம் மற்றும் மொபைல் ஆப்புகளை உருவாக்குகிறார்கள். இது போன்ற டெவலப்பர்க்கு இந்தியாவில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹச்சிஎல், மற்றும் சோஹோ. போன்ற கம்பெனிகளில் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றது.
டேட்டா
சயின்ஸ் மற்றும் டேட்டா அனலெட்டிக்ஸ்
மென்பொருள் துறையில் பல்வேறு விதத்தில் பணிகள் கிடைக்கின்றது. அதில் குறிப்பிட்ட விதமாக சொல்ல வேண்டும் என்றால் இந்த டேட்டா சயின்ஸ் துறை தான். ஏனென்றால் தகவல்களை அலசுவதற்கும் அதை கையாள வேண்டியதற்கும் முக்கியமான பணியாற்றல் தேவைப்படுகிறார்கள். மியூசிக்மா, பிராக்டல் அனலிடிக்ஸ், பேடிஎம் மற்றும் ரெசர்பே போன்ற கம்பெனிகள் டேட்டா சயின்ஸ் பணிகளுக்கான வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
கிளவுட்
கம்ப்யூட்டிங்
கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் சமீபகாலமாக அதிக வேலை
வாய்ப்புகள் இருக்கின்றது. கிளவுட் சூழலில் ஒரு மென்பொருளை உருவாக்குதல் மற்றும்
அதனை பராமரித்தல் போன்ற பணிகளை அந்த மென்பொருள் பணியாளர்கள் செய்கிறார்கள்.
இந்தியாவில் பல முக்கிய கம்பெனிகள் இந்த வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. குறிப்பாக
அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் கிளவுட் போன்ற நிறுவனங்கள்
கிளவுட் கம்ப்யூட்டிங் பணிகளை
வழங்குகின்றன.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு துறை தற்காலத்தில் மிகவும் பிரபலமான, பலரும்
விரும்பக்கூடிய துறையாக இருக்கின்றது. காரணம் இது எதிர்காலத்தில் மிகப்பெரிய
வளர்ச்சி அடையும்,, இப்பொழுது இந்த துறையில் இருக்கும்
பொழுது எதிர்காலத்தில் நல்ல சம்பளம் பெரும்படியான வேலைகள் கிடைக்கும். அதே போல்
அனைவரின் எதிர்பார்ப்பும் உலகம் அடுத்த கட்டத்திற்கு எப்படி செல்ல போகிறதோ அதை
தெரிந்து கொள்ள வேண்டும், அதை நாமும் படிக்க வேண்டும்
என்பதுதான். இப்படிதான் அனைவரும் மென்பொருள் படிக்க வேண்டும் என்று கணினி துறையிலே
வந்து சேர்ந்தார்கள். அதேபோல்தான் அடுத்தகட்ட வளர்ச்சியாக இந்த செயற்கை நுண்ணறிவு
துறை பார்க்கப்படுகிறது.
இயந்திரங்களை உருவாக்குதல், பல்வேறு மாடல் அமைப்புகளை கொண்ட இயந்திரங்களை உருவாக்கி அதை பயன்படுத்துதல் மேலும் செயற்கை நுண்ணறிவு கொண்ட வலைதளங்களை உருவாக்குதல், செயற்கை நுண்ணறிவு கொண்ட மின்னணு சாதனங்கள் உதாரணமாக ஏ ஐ மொபைல் போன், ஏ ஐ ஸ்மார்ட் வாட்ச் போன்றவை உருவாக்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோட் தொழில்நுட்பம்
தற்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. பல வளர்ந்த நாடுகளில் சர்வ
சாதாரணமாக மக்கள் செயற்கை நுண்ணறி கொண்ட ரோபோட் மற்றும் செயற்கை நுண்ணறி கொண்ட
மனித வடிவிலான ரோபோட்டை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் மிகப்பெரிய ஒரு அளவில் இதில் வேலை வாய்ப்பு இருக்கும் என்று நம்பப்படுவதால் பலரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கான பல கம்பெனிகள் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.
சைபர்
பாதுகாப்பு
தற்காலத்தில் தகவல்களை பாதுகாப்பதற்காகவும் மேலும் சைபர் தாக்குதலில் இருந்து தடுப்பதற்காகவும் இந்த சைபர் பாதுகாப்பு துறை சிறந்து விளங்குகின்றது. குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் இந்த துறையில் ஆர்வம் காட்டுவதால் இதற்கான மதிப்பு என்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான துறை தான் சைபர் பாதுகாப்பு ஆகும்.
மொபைல்
அப்ளிகேஷன்
மொபைல் அப்ளிகேஷன் ஒரு தரம் வாய்ந்த எப்பொழுதும் நல்ல சம்பளம் தரக்கூடிய ஒரு துறையாகும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் அப்ளிகேஷனை உருவாக்க கற்றுக் கொண்ட டெவலப்பர்கள் அதை தனியாகவும் மற்றும் குறிப்பிட்ட கம்பெனியின் மூலமாகவும் உருவாக்குகிறார்கள். ஸ்விக்கி, சோமாடோ, பிளிப்கார்ட் நிறுவனங்களுக்காக மொபைல் அப்ளிகேஷன் உருவாக்குதல் மிகப்பெரிய லாபத்தை தரக்கூடியதாக இருக்கின்றது.
கேம்
டெவலப்பர்
பலரும் விரும்பி செய்யக்கூடிய ஒரு வேலையாக கேம் டெவலப்பர் வேலைகள் இருக்கின்றது. வீடியோ கேம்களின் மோகம் என்றைக்குமே இருந்து கொண்டு தான் இருக்கும். 3டி அனிமேஷனில் விளையாடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அதனால் கேம் டெவலப்பர் பணி நல்ல வருமானத்தை தரக்கூடியதாக இருக்கின்றது.
வெளிநாடில் வேலை வாய்ப்புகள்
வெளிநாட்டில் பொதுவாக சாப்ட்வேர் டெவலப்பர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றது. குறிப்பாக பைதான் , ஜாவா, டாட் நெட், மற்றும் பிஹபி போன்றவற்றில் திறன்கள் இருக்கும் பட்சத்தில் சாப்ட்வேர் டெவலப்பர்கள் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் லட்சங்களுக்கு மேல் சம்பளங்களை பெறுகின்றார்கள்.
அதேபோல் டேட்டா சயின்டிஸ்டிகளுக்கு மெஷின் லேர்னிங், டேட்டா மாடலிங்
மற்றும் பைதான் போன்றவற்றில் திறன்கள் அதிகமாக இருக்க
வேண்டும். இவர்களுக்கு அமெரிக்க, இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளில் பணிகள் கிடைக்கின்றது.
கிளவுட் ஆர்கிடெக் போன்ற பணிகளுக்கு சிங்கப்பூர், கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. செயற்கை நுண்ணறிவுகள் டென்சார் ப்லொவ் மற்றும் ப்யடோர்ச் போன்றவற்றை திறன்கள் இருக்கும் பட்சத்தில் அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் சவுத் கொரியா போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றது.
உலகளாவிய வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு பி. டெக் முடித்தவுடன் எம் எஸ் அல்லது எம் பி ஏ போன்ற மேற்படிப்புகளில் தகுதியை மேம்படுத்திக் கொள்ளலாம். வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை பெற வேண்டும் என்பவர்கள் இந்த கணினி திறன்கள் மட்டும் உங்களுக்கு போதாது. மொழி திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதனால் ஐஇஎல்டிஸ், டோபல் போன்ற தேர்வுகளை வெற்றி பெறும் அளவுக்கு ஆங்கில மொழித் திறனை வளர்த்துக் கொள்வதும் அவசியம்.


