ஆபத்தான உணவு பொருள் பட்டியலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆபத்தான உணவு பொருள் பட்டியலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை சேர்ப்பதற்கான காரணம் என்ன என்று இதை அறிந்தவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரணம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் அதை சுத்திகரிப்பதற்காக உடல் நலத்திற்கு கேடு விளைவிகின்ற உணவுப் பொருட்கள் பொருட்கள் கலந்து இருப்பதாக தெரிவிக்கின்றார்கள். எனவே இந்த சுத்திகரிப்பு ஆலைகளில் கடுமையான ஆய்வு செய்வதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக குடிக்கின்ற குடிநீரில் ஆபத்தான பொருட்கள்
ஏதேனும் இருக்கின்றனவா?
என்று யாரும் சிந்திப்பதில்லை. மினரல் வாட்டர் என்று பெயரில் நாம் குடிக்கின்ற குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தான். ஆனால் இதை
சுத்திகரிப்பதற்காக எந்த மாதிரியான பொருட்கள் அதில் பயன்படுத்தப்படுகின்றது
என்கின்றதை பலரும் அறிவதில்லை.
இதை சுத்திகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள்
குடிப்பவரின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியது என்கின்ற கருத்து உருவானதால்
மத்திய அரசு இதனை அதிக ஆபத்து உள்ள உணவுப் பொருள்கள் பிரிவில் சேர்த்துள்ளது. இது எதற்காக என்றால் இது
மாதிரியான அதிக ஆபத்துள்ள உணவுப் பொருள் பட்டியலில் பேக்கேஜ்டு மினரல் வாட்டர் இருக்கும் பட்சத்தில்
அது சுத்திகரிக்கும் ஆலைகளில் மிகக் கடுமையான ஆய்வுகள் நடத்தப்படும்.
நுகர்வோரின் உடல்நிலை பாதுகாப்பதற்காக எப் எஸ் எஸ் ஏ ஐ தரச் சான்றிதழ் கட்டாயம் பெற்று தான் இந்த சுத்திகரிப்பு ஆலைகளை நடத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டை உறுதி செய்து இருக்கிறார்கள்.
இயற்கையான குடிநீருக்கு எதுக்கு உணவு தர கட்டுப்பாடு
என்கின்ற சந்தேகம் வரலாம். இந்த சுத்திகரிக்கப்பட்ட பேக்கேஜ் குடிநீரை
சுத்திகரித்து தரும்போது இருக்கின்ற சில பிரச்சனைகள் தான் பேக்கேஜ் மினரல் வாட்டரை
ஆபத்தான உணவு பிரிவு பட்டியலில் சேர்த்துள்ளார்கள். இதற்கான பல காரணங்கள்
இருக்கின்றன.
தாது உப்புகள் கிடைப்பதில்லை
சுத்திகரிப்பின் போது இயற்கையான தாது உப்புகள்
நீக்கப்படுவதால் அதை குடிப்பவரின் உடலுக்கு தேவையான தாதுக்கள் கிடைப்பதில்லை.
மினரல் வாட்டர் என்ற பெயரில் இவர்கள் அதிக முறை சுத்திகரிப்பதால் அதில்
இருக்கக்கூடிய தாதுக்கள் குறைந்து விடுகின்றன.
நமக்கு தேவையான தாது பொருட்கள் உணவுப் பொருட்களில்
இருந்து மட்டும் கிடைத்து விடுவதில்லை. 70% வரை தாதுக்கள் காய்கறி, கீரைகள் மற்றும் பழங்களிலிருந்து
கிடைத்துவிடும் ஆனால் ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ அவனுக்கு 100% தேவையான தாது உப்புக்கள் கிடைக்க வேண்டும். அதற்கு முக்கிய பங்காற்றுவது
குடிநீர் தான். தண்ணீரின் மூலம் தான் நாம் முழுமையான தாது உப்புகளை பெற முடியும்.
ரசாயன
முறையில் சுத்திகரித்தல்
நீரை சுத்திகரிப்பதற்காக சில ரசாயனங்கள்
பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நாம் குடிக்கின்ற நீரின் தரமானது மிகவும் குறைந்த
அளவுடன் தான் இருக்கின்றது. மேலும் குடிப்பவரின் உடல் நலனை பாதிப்பதற்கு அதிக
வாய்ப்பு உள்ளது.
தரத்தினை
சரியாக பரிசோதிப்பதில்லை
பேக்கேஜ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது பல
நிறுவனங்களில் இருந்து விற்கப்படுகின்றது ஆனால் இதற்கான சரியான தர ஆய்வு
செய்யப்படுவதில்லை. பரிசோதிக்கப்படாமல் விற்கப்படும் இது போன்ற குடிநீரால்
ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் விதத்தில் இருக்கின்றது.
பிளாஸ்டிக்
பயன்பாடு
இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக
உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டிலின் தரத்தை பரிசோதிக்கப்படாமல் வழங்கப்பட்டால்
அது மிகப் பெரிய உடல் நலக் கேட்டை உருவாக்கும். பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக
மறுசுழற்சி செய்தல் மற்றும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கின் தரம் ஆகியவற்றை
பரிசோதிக்க வேண்டும்.
மேலும்
வாசிக்க: 2025 ஆண்டில் கால நிலையில்
எதிர்கொள்ளப் போகும் சவால்கள்.

.jpg)