ஐந்து ஆண்டுகளில் பணியாளர்கள் தேவை அதிகரிக்கப் போகும் துறைகள்.

உலகப் பொருளாதார மன்றத்தின் புதிய ஆய்வு அறிக்கை படி கிட்டத்தட்ட 170 மில்லியன் (17கோடி) புதிய வேலைவாய்ப்புகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி ஆராய்வதற்கு உலக பொருளாதார மன்றம் முடிவு செய்தது.

இதை கண்டுபிடிக்க உலகம் எங்கிலும் 1000 மேற்பட்ட நிறுவனங்களை ஆய்வு செய்து 14 மில்லியனுக்கும் (1.4 கோடி) அதிகமான பணியாளர்களிடம் கருத்துக்களை கேட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் வரக்கூடிய வேலை வாய்ப்புகள் பற்றிய ஆய்வினை வெளியிட்டு இருக்கிறது.

இந்த ஆய்வின்படி, தொழில்நுட்ப வளர்ச்சி, பசுமை மாற்றம், பொருளாதார மற்றும் மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றால் தற்பொழுது இருக்கும் தொழில்கள் அனைத்தும் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு எதிர்கால வேலைகள் மாற்றமடையும் என்று கண்டறிந்த பட்டுள்ளது.

இந்த 170 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளில் 92 மில்லியன் (9.2 கோடி) வேலைகள் தற்பொழுது இருக்கும் வேலைகளில் தன்மையை தாண்டி புதிதாக மாற்றமடையும் மற்றும் 78 மில்லியன் (7.8 கோடி) வேலைகள் புதிதாக உருவாக்கப்படும்.

எதிர்காலத்தில் குறிப்பிட்ட நான்கு புதிய வேலைவாய்ப்புகள்

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப குறிப்பிட்ட நான்கு பணிகள் எதிர்காலத்தில் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

பெரிய தரவு நிபுணர்கள்

நிதி தொழில்நுட்ப பொறியாளர்கள்

இயந்திர கற்றல் நிபுணர்கள்

இந்த பணிகளுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்க கூடும் என்று நம்பப்படுகிறது காரணம் இந்த துறைகளில் தற்கால வளர்ச்சி என்பது அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் இதற்கான பணியாளர்களின் தேவை என்பது அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இருக்கும் துறைகளில் வேலை வாய்ப்புகள்.

விவசாய தொழிலாளர்கள் தேவை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. விவசாய தொழிலாளர்களின் தேவையே எதிர்காலத்தில் முதலிடத்தில் இருக்கும்  என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. அதேபோல் ஓட்டுநர்கள், மென்பொருள் உருவாக்குவார்கள், கட்டட தொழிலாளர்கள் மற்றும் கடை விற்பனையாளர்கள் போன்ற பணியாளர்களின் தேவையும் 2030 ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்கும்.

உணவு பதப்படுத்தும் தொழிலாளர்கள், பராமரிப்பு வேலை செய்பவர்கள், நர்சிங் பணியாளர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் ஆலோசனை வழங்க கூடிய வல்லுநர்கள் போன்ற பணிகளுக்கான தேவையும் அடுத்த ஐந்தாண்டுகளில் அதிகரிக்க கூடும் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகின்றது.

எதிர்கால பணிகளை பெறுவதற்கு நிறைய திறமைகளை தற்போது உள்ளவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது அந்த ஆய்வறிக்கை. தலைமை பண்பு, சமூக செல்வாக்கு, திறமையான மேலாண்மை, பகுப்பாய்வு சிந்தனை மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகிய திறன்களை வளர்த்துக் கொள்ளும் பட்சத்தில் எதிர்கால வேலை வாய்ப்புகள் அனைத்தையும் பெறக்கூடும் என்று நம்பப்படுகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை