நீங்களே விண்ணப்பித்து eShram அட்டையை பெறுவது எப்படி?



தற்பொழுது பல்வேறு வகையான மத்திய அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு eShram  என்கின்ற அட்டையை வாங்குவது முக்கியத்துவம் ஆகிறது.

ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் அந்த தனியார் நிறுவனத்தின் மூலம் இபிஎப் மற்றும் 21,000 க்கு குறைவாக சம்பளம் பெறுபவர்களுக்கு இஎஸ்ஐ போன்ற திட்டங்கள் இருக்கின்றன. அதன் மூலம் அவர்கள் வருங்கால வைப்பு நிதி மற்றும் மத்திய அரசின் மருத்துவ உதவி ஆகியோவற்றை பெறுகிறார்கள்.

ஆனால் அமைப்புசாராத தொழில் செய்பவர்கள் அதாவது கூலி வேலை செய்பவர்கள், சாலையோரம் கடை வைத்திருப்பவர்கள், கூவி வைப்பவர்கள் விற்பவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என எந்த பணி செய்பவராக இருந்தாலும் உங்களுக்கான அடையாள அட்டை போன்றவை  இருக்காது.

எனவே eShram என்கின்ற இந்த அட்டை மூலம் நீங்கள் எந்த ஒரு வேலையை செய்தாலும் சரி வீட்டு வேலை செய்பவராக இருந்தாலும் சரி, கூலி வேலை செய்பவராக இருந்தாலும் சரி எந்த வேலையை செய்பவராக இருந்தாலும் இந்த அட்டை மூலம் நீங்கள் அந்த வேலையை குறிப்பிட்டு eShram என்கின்ற அட்டையை வாங்கிக் கொள்ள முடியும்.

இதன் மூலம் மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பண உதவிகள் போன்றவற்றை பெறுவதற்கு எளிதாக இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய நலத்திட்ட உதவிகள் மற்றும் மத்திய அரசாங்கம் நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் செலுத்தக்கூடிய பணம் ஆகியவற்றை பெறுவதற்கும் இந்த eShram அட்டை என்பது அவசியமாகிறது.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு குறிப்பிட்ட மாத இடைவெளியில் மத்திய அரசு பணம் செலுத்துகிறது மேலும் சத்துள்ள உணவுப் பொருள்கள் அடங்கிய பெட்டகம் ஒன்றையும் குறிப்பிட்ட மாத இடைவெளியில் வழங்குகின்றது.

இது போன்ற பயன்களை பெறுவதற்கு இந்த eShram அட்டை அவசியமாகும். இந்த eShram அட்டை பெறுவது மிகவும் சுலபம்தான். eshram.gov.in என்கின்ற இணையதளத்தில் பதிவு செய்து நீங்களே பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த இணையதளத்திற்கு சென்று உங்களது ஆதார் உடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணை கொடுக்கவும். பின்பு அதில் வரும் ஓடிபி யை உள்ளீடு செய்யவும். பின்பு உங்களது முகவரி வங்கி கணக்கு எண் மற்றும் உங்களது நாமினியின் தகவல்கள் ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்யலாம்.

பதிவு செய்யும்போது நட்சத்திரம் குறிப்பிட்ட பகுதிகள் கட்டாயமாகிறது, மேலும் இதை பதிவு செய்வதற்கு எந்த ஒரு ஆவணமும் கட்டாயம் இல்லை. ஏனென்றால் உங்களது ஆதார் என்னுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு ஓடிபி வரும் அதை நீங்கள் உறுதி செய்வதன் மூலம் நீங்கள் இந்த அட்டையை பெற்றுக் கொள்ள முடியும். உங்களிடம் ஆவணங்கள் இருந்தால் அதை பதிவேற்றம் செய்து நீங்கள் விண்ணப்பிக்கலாம். இல்லையென்றால் எந்த ஒரு ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய தேவையில்லை.

தேவையானவை

உங்கள் ஆதார் எண்

வங்கிக் கணக்கு எண்

வங்கியின் ஐஎப்எஸ்சி குறியீடு 

முகவரி

நாமினியின் தகவல்கள்

ஆகிய தகவல்களை  நீங்கள் கொடுத்தாலே போதும் உங்கள் ஆதார் அட்டையில் இருக்கக்கூடிய புகைப்படத்துடன் அட்டை பதிவிறக்கம் ஆகும். பின்பு நீங்கள் இதை ஆதார் அட்டை போன்று லேமினேஷன் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை