சூடான தண்ணீரைப் பெற புதுமையான மின்னணு சாதனம்.

புதிது புதிதாக பல மின்னணு சாதனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன அவற்றில் சில நமக்கு மிகவும் பயன்படும் விதத்தில் இருக்கின்றது.

சூடான தண்ணீரை உடனடியாக தருவதற்கு இந்த ஆட்டோமேட்டிக்  வாட்டர் டிஸ்பென்ஸர் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. 20 லிட்டர் வரை இருக்கின்ற தண்ணீர் கேனில் நாம் இந்த கருவியை பொருத்துவதன் மூலம் எளிதாக சூடான தண்ணீரை பெறலாம்.

5 லிட்டர் முதல் 20 லிட்டர் வரையிலான அனைத்து விதமான பாட்டில்களிலும் இந்த கருவியை பொருத்தினால் உடனடியாக வெந்நீர் நமக்கு கிடைத்து விடும். பிளம்பிங் மோடு மூலம் இந்த கருவியானது செயல்படுகிறது.

இந்த கருவி செயல்பட 1200 எம் ஏ ஹச் பேட்டரி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தாலே போதும் ஒரு மாத காலம் வரை இதனை நாம் பயன்படுத்த முடியும்.

மழைக்காலங்களில் சுடுதண்ணி வேண்டுவோர் பல்வேறு விதமான சாதனங்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதில் இந்த ஸ்மார்ட்டான ஆட்டோமேட்டிக் வாட்டர் டிஸ்பென்சரை பயன்படுத்தலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை