உடல் ஆரோக்கியத்தை விட முக்கியம் பல் ஆரோக்கியம்.

பலரும் உடல் நலப் பாதுகாப்பை பற்றி தான் அதிக அக்கறை கொள்கிறார்கள் ஆனால் பற்களின் ஆரோக்கியத்தை பற்றி குறிப்பிட்ட வயது வரை சிந்திப்பதே இல்லை. ஆனால் உடல்நல ஆரோக்கியம் உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை வைத்து தான் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நல்ல பல் ஆரோக்கியம் தான் உணவை நன்றாக மென்று தின்பதற்கு உதவி செய்யும். அப்பொழுதுதான் உங்கள் செரிமானம் நல்ல முறையில் இருக்கும் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். அதனால் பற்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியமாகும்.

காலையில் எழுந்தவுடன் நீங்கள் வெந்நீர் குடிப்பதில் இருந்து இரவு வெந்நீரில் வாய் கொப்பளிக்கும் வரை உங்கள் பல் ஆரோக்கியம் இதில் அடங்கி இருக்கிறது. இரவு பல் துலக்குவது மற்றும் சூடான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது பல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இதை பழக்கத்தில் கொள்பவர்கள் நல்ல பல் ஆரோக்கியம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

திரிபலா சூரணம் மற்றும் கடுக்காய் பொடியை வைத்து பல் விலக்கும் பழக்கம் உடையவர்கள் உறுதியான பற்களை உடையவர்களாக இருக்கிறார்கள். பல் ஆரோக்கியத்திற்கென்று இருக்கக்கூடிய ஒரு உணவுப் பொருள்தான் கரும்பாகும். கரும்பை மெல்வதன் மூலம் பற்கள் உறுதி அடைகின்றன அதில் உள்ள சத்துப் பொருட்கள் மூலம் ஈறுகளும் வலிமை அடைகின்றன.

அதேபோல்தான் நெல்லிக்காயும் பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக்கூடியதாக இருக்கிறது. அதிகப்படியான சர்க்கரை உணவுகளை எடுத்துக் கொள்வது பல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல.

வைட்டமின் சி மற்றும் டி அடங்கிய உணவுப் பொருட்களை சாப்பிடுவதும், கால்சியம் இருக்கின்ற உணவுகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதும் பல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

பல் துலக்கும் போது எவ்வளவு நேரம் எடுத்து துலக்க வேண்டும் என்கின்ற எண்ணம் அனைவருக்கும் வரும். இரண்டு நிமிடம் அளவுக்கு பல் தேய்த்தால் போதும் உங்களது பல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பல்லில் பாசி கறை படிதல் மற்றும் மஞ்சள் கறை போன்ற பிரச்னை இருப்பவர்கள் எலுமிச்சை மற்றும் உப்பை ஒன்றாக சேர்த்து பல் துலக்குவதன் மூலம் அந்த கறையை போக்க முடியும். துளசியை சாப்பிடுபவர்கள் பற்களில் இருக்கக்கூடிய தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை