2030 சூப்பர் கம்ப்யூட்டர் விற்பனைக்கு வரும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

உலகின் அதிவேக கம்ப்யூட்டரை ஜப்பானில் உள்ள இரண்டு நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்து வருகின்றன. புஜிட்சூ லிமிடெட் மற்றும் ரீகன் இன்ஸ்டியூட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து ஜூன் 2020 ஆம் ஆண்டு இந்த சூப்பர் கம்ப்யூட்டரை பற்றி அறிமுகப்படுத்தினார்கள்.

ஜப்பான் அரசாங்கம் இந்த கம்ப்யூட்டருக்கு உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என்கின்ற சான்றிதழை வழங்கி உள்ளது.

உலகின் மற்ற நாடுகளுக்கும் ஜப்பானுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. பிற நாடுகளில் எப்பொழுதாவது இயற்கை சீற்றங்கள் வரும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு அந்த நாடுகள் வெகு காலங்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால் ஜப்பானில் அடிக்கடி இயற்கை சீற்றங்கள் வந்தாலும் வெகுவிரைவில் அவர்கள் மீண்டு விடுவார்கள்.

அதே போல் உலகில் அனைத்து நாடுகளும் கொரோனா நோய்த்தொற்று பிரச்சனையில் இருந்தால் ஜப்பான் மட்டும் அதிவேக கணினியை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடும். இந்த அதிவேக கணினியும் கொரோனா காலத்தில் உருவாக்கபட்டது. அந்த காலகட்டத்தில் தான் ஆராய்சிகள் வேகமாக நடந்து வந்தன.


புரிதலுக்கு மட்டும்

சூப்பர் கம்ப்யூட்டர்

சூப்பர் கம்ப்யூட்டரின் நோக்கம் மிகவும் எளிது. நவீன சமுதாயம் எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்கும் வகையில் இந்த கணினி உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலம் அதிவேக செயல்வேக கணினி பயன்பாடு தேவைப்படும் என்ற நோக்கில் இந்த சூப்பர் கணினி தயாரிக்கப்பட்டு வருகின்றது. தற்போது உள்ள கணினியில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் இருக்கும் பிரச்சனைகளும் தீர்க்கப்படும். மேலும் இது தற்பொழுது உள்ள கணினியை விட மிக வேகமாக செயல்பட கூடியது.

அதிகமான தகவல்களை உள்ளடக்கம் கொண்டுள்ளது மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் கொண்டது. இந்த சூப்பர் கணினியின் மிக முக்கியமான நோக்கம் என்பது குறைந்த மின்சாரத்தை  பயன்படுத்துவது மட்டுமல்லாமல் அதிகப்படியான செயல்பாட்டையும் கொண்டிருப்பது தான்.

பயனர் விரும்பி பயன்படுத்தும் வகையில் இந்த சூப்பர் கணினி வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள இயந்திரங்கள் எந்த அளவு வேலை செய்கின்றனோ அதைவிட அதிகமான வேலை செய்யும் திறன் வாய்ந்தது.

 எதிர்காலத்தில் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் 2030ல் சந்தைப்படுத்தப்பட உள்ளது. தொழில்துறையில் மிகப்பெரும் வளர்ச்சியை காண்பதற்கு இந்த சூப்பர் கணினி பயன்படும் என்று கூறப்படுகிறது.

தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரும் உதவியாக இந்த சூப்பர் கணினி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூப்பர் கணினி  ஒரு நுண் செயலியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் இயங்குதளமாக லினக்ஸ் மற்றும் மக்கெர்னெல் லைட் வெயிட் கர்னல் இரண்டையும் ஒரே நேரத்தில் கொண்டு இயங்குகிறது.


Click to buy on Amazon

கருத்துரையிடுக

புதியது பழையவை