அஜீரண கோளாறுகள் குணமாக எளிமையான வீட்டு மருத்துவம்.

அஜீரணம் சிலருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பதுண்டு. பொதுவாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அதிகமாக அஜீரணம் வராது. அதே சமயத்தில் நிறைய தண்ணீர் குடிப்பதாலும் அஜீரணம் வராமல் தடுக்கலாம். வயதான பிறகு சிலருக்கு அஜீர கோளாறுகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

சாப்பிடும் உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். சாப்பிட்டு சில நிமிடங்கள் கழித்து நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நமக்கு பிடித்த உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்.

எல்லா உணவிலும் ஏதோ ஒரு நல்ல சுவை இருக்கும் அதனால் எளிமையாக உணவாக இருந்தாலும் சரி உயர்தர உணவாக இருந்தாலும் சரி எந்த உணவிலும் சுவை என்பது இருக்கும் அதனால் விரும்பி சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது பேசாமல் சாப்பிட வேண்டும் பேசிக் கொண்டே சாப்பிடுவது என்பது செரிமான பிரச்சினை ஏற்படுத்தும் எனவே அமைதியாக சாப்பிடும்போது மட்டும்தான் உணவு எளிதில் செரிமானம் ஆகிறது.

இதையும் தாண்டி பலருக்கும் இந்த செரிமான பிரச்சனை உண்டு. அதுக்கு எளிதான ஒரு மருத்துவம் நம் வீட்டிலேயே உண்டு.

  1. கருவேப்பிலை
  2. சுக்கு
  3. சீரகம்

இந்த மூன்று பொருட்களையும் நீரில் போட்டு காய்சி வடிகட்டி ஒரு கசாயம் போல் தேன் கலந்து குடித்தால் அஜீரணம் சரியாகும்.

அஜீரணம் அதிகமாக இருந்தால் மூன்று நாட்கள் வரை காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த பானத்தை நாம் அருந்தும் போது அஜீரணம் முழுமையாக குணமாகும்.

இதையும் வாசிக்க: இந்த மூலிகைகளின் பலன்களை நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

இதையும் வாசிக்க: உடல் ஆரோக்கியத்தை விட முக்கியம் பல் ஆரோக்கியம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை