இளம் வயதினருக்கு மிகப்பெரிய மனவலியை கொடுக்கக்கூடியது தான் இந்த இளநரை. பலரும் இளநரையிலிருந்து மீண்டு வர வேண்டும் இளமையாக தெரிய இருக்க வேண்டும் என்கின்ற ஆவல் இருக்கும்.
இளநரை தடுப்பதற்கு சில எளிமையான வழிகள்:
மூங்கில் இலைகள் பொதுவாக இளநரையை
தடுக்க கூடியவை. தேங்காய் எண்ணெயில் மூங்கில் இலைகளை போட்டு இரண்டு வாரம் ஊற
வைத்து அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் இளநரை சரியாகும்.
கூந்தலில் இளநரையை போக்குவது மட்டுமல்லாமல் அழகையும் கூட்டக் கூடியது தான்
மருதாணி. மருதாணியை அரைத்து தலையில் தேய்த்து ஊற வைத்து சிறிது நேரம் கழித்து
குளித்து வந்தால் ஒட்டுமொத்த கூந்தலின் அழகும் மெருகு பெறும்.
கருவேப்பிலையை அரைத்து சிறு சிறு
உருண்டைகளாக மாற்றி வெயிலில் காயவைத்து பின்பு தேங்காய் எண்ணெயுடன் கலந்து இரண்டு
வாரங்களுக்கு மேல் ஊற வைத்து அதை தலையில் தேய்த்து வந்தால் அழகான கருமையான தலை
முடியை மாறும்.
வால்மிளகு கருஞ்சீரகம் ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து பொடி செய்து தேங்காய்
எண்ணெயில் இரண்டு வாரங்கள் ஊற வைத்து தலைக்கு தேய்த்து வர இளநரை மறையும்.
கருவேப்பிலையும் தேங்காய் பாலையும் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம்
கழித்து குளித்து வந்தால் கூந்தல் கருமையாக வளர வாய்ப்புள்ளது.
மருதாணி இலை நெல்லிக்காய் சாறு இவற்றை அறைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம்
கழித்து குளித்து வந்தால் இளநரையை தடுக்கலாம்.
வெந்தயம், வால்மிளகு,
சீரகம் இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து தேங்காய்
எண்ணெயுடன் கலந்து தொடர்ந்து அந்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால்
இளநரை மறைய வாய்ப்புள்ளது.
கரிசலாங்கண்ணி சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தேய்த்து வந்தால் இளநரை
மறையும்.
இளநரையை போக்குவதற்கு சாப்பிட வேண்டியவை
திரிபலா சூரணம் பல வகையான மருத்துவ குணங்கள் வாய்ந்தது. நாட்டு மருந்து
கடைகளில் எளிதாக கிடைக்கும் திரிபலா சூரணத்தை காலையில் வெறும் வயிற்றில் இளம்
சூடான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி கலந்து குடித்தால் இளநரை மறையும்.
கருவேப்பிலையும் நெல்லிக்காயும் அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் இளநரை
மறையும்.
பொதுவாக இளநரை உருவாக காரணம் வைட்டமின் பி சத்து நம் உடலில் குறைவது தான் எனவே
வைட்டமின் பி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். முட்டை பால்
மீன்கள் போன்ற உணவைகளில் விட்டமின் பி சத்துக்கள் இருக்கும்.
வெள்ளம், பீட்ரூட், நாவல் பழம், சுண்டைக்காய் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் இளநரை தடுக்கலாம்.

