![]() |
புரிதலுக்காக மட்டும் |
தமிழ்நாட்டில் இப்படி ஒரு அசத்தலான திட்டமா? என்று ஆச்சரியப்பட வைக்கும் வகையில் தமிழக அரசு
ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதுதான் தமிழக மலையேற்ற திட்டம், இந்த திட்டம் சுற்றுலா பயணிகளுக்கும் மலையேற்றம்
செய்ய விரும்புவர்களுக்கும் மிகவும் பயனுள்ள திட்டமாக
இருக்கிறது.
இந்த திட்டத்துக்கான தனியாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில்
மலையேற்றம் பயணம் செய்ய விரும்புவர்கள் முன்பதிவு செய்த பிறகு வனத்துறை மற்றும்
வழிகாட்டிகளின் வழிகாட்டின்படி மலையேற்றம் செய்யலாம்.
தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 40 வழித்தடங்களை அடிப்படையாக வைத்து தமிழக மலையேற்றம் திட்டத்தை தமிழக அரசாங்கம்
உருவாக்கி இருக்கிறது. இதற்கு அவர்கள் உருவாக்கிய அந்த டிஜிட்டல் காணொளி 30 வினாடிகள் வரை இருக்கிறது. அதில் தெளிவாக அந்த மலையற்ற
வழித்தடம் நமக்கு காட்சியளிக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக டிஜிட்டல் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன மலையேற்றம் செய்ய
விரும்புவர்கள் பதிவு செய்து வனத்துறை வழிகாட்டலின் படி சென்றுவர ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இந்த 40 வழித்தடங்களை மூன்று பிரிவுகளாக எளிதான பகுதி – 14, மிதமான பகுதி – 14, மற்றும் கடினமான பகுதி - 12 என பிரித்துள்ளார்கள்.
வனத்துறை கூறக்கூடிய குறிப்பிட்ட இடங்களுக்கு சென்றால் போதும் வழிகாட்டிகள் மலையேற்றம் செய்ய விரும்புபவர்களை அழைத்துச் செல்வார்கள். இந்த வழிகாட்டிகளை அந்தந்த உள்ளூர் பகுதி மக்கள், பழங்குடியினர் ஆகியோரிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். வழிகாட்டிகள், வனத்துறையினர் ஆகியோருடன் பங்கேற்க விரும்புவோர் செல்ல வேண்டும்.
![]() |
புரிதலுக்காக மட்டும் |
முன்பதிவு செய்ய விரும்புவர்களுக்கான விளக்கம்
trektamilnadu என்ற இணையதளத்தில் வலது புறம் இருக்கக்கூடிய சைன் இன் பகுதியை கிளிக் செய்தால் அதில் உங்களது பெயர், அலைபேசி எண், ஈமெயில் முகவரி மற்றும் இதற்கான கடவுச்சொல் ஒன்றையும் கொடுத்து சைன் அப் செய்து கொள்ளுங்கள். பின்பு மூன்று பகுதிகள் ஆக பிரிக்கப்பட்டுள்ள எளியது, மிதமானது, கடினமானது என எந்த பகுதிகளுக்கு நீங்கள் செல்ல வேண்டுமோ அதை கிளிக் செய்து பதிவு செய்யலாம்.
பதிவு செய்பவரின் வயது 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். 18
வயதுக்கு உட்பட்டவர் ஆக இருந்தால் பெற்றோர் மற்றும்
பாதுகாவலரின் ஒப்புதலோடு பதிவு செய்ய வேண்டும். மேலும் 10 வயதுக்கு உட்பட்டவர் ஆக இருந்தால் எளிதாக
செல்லக்கூடிய இடங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வு செய்யும் நாள் ஒரு வாரத்திற்கு
முன்பாக நீங்கள் பதிவு செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. நேரம் பொதுவாக காலை 7
மணி மட்டுமே காட்டுகிறது. பதிவு செய்யப்படும் நபர்களின்
எண்ணிக்கை ஒன்றிலிருந்து ஐந்து வரை மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு
பகுதிக்கும் ஒவ்வொரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நீலகிரி,
கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, மதுரை, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூ,ர் திருவள்ளூர், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்கள் மட்டுமே இந்த வழித்தடங்களில் உள்ளன. எனவே இந்த
மாவட்டங்களைச் சேர்ந்த மலை ஏற்ற பகுதிகளுக்கு தான் நாம் மலையேற்றம் செய்ய
முடியும்.
இதில் எளிதான பகுதி பகுதிகளில் நாம் மலையேற்றம் செய்ய 699
ரூபாயிலிருந்து 1499 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மிதமான பகுதிகளில்
பயணம் செய்ய 1199 ரூபாயிலிருந்து
3549
ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடினமான பகுதிகளில்
பயணம் செய்ய 1699 ரூபாயிலிருந்து
5099
ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மலையேற்றம் செய்ய விரும்பும் பங்கேற்பாளர்கள், வழிகாட்டிகள் என அனைவருக்கும் காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ள.

