![]() |
புரிதலுக்காக மட்டும் |
இலை கசாயம் செய்யும் முறை
இந்த மழைக்காலத்தில் காய்ச்சலில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள சூப்பரான
கசாயம் செய்யும் முறை.
வீட்டிலேயே நீங்கள் இந்த கசாயத்தை எளிதாக செய்து காய்ச்சலை போக்கலாம். அனைத்து
மூலிகை இலைகளையும் போட்டு இலைகளால் செய்யக்கூடிய ஒரு எளிய கசாயம்.
- துளசி
- தூதுவளை
- வெற்றிலை
- தும்பை
- நொச்சி
இது போன்ற இலைகளை வெந்நீரில் வேக வைத்து எளிதாக இந்த இலை கசாயத்தை செய்யலாம். நிச்சயம் காய்ச்சல் குணமாக வாய்ப்புள்ளது. தினமும் மாலை வேளைகளில் இந்த கசாயத்தை செய்து குடித்து பாருங்கள். நிச்சயம் மழைக்காலத்தில் வரக்கூடிய நோய் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கும்.
![]() |
புரிதலுக்காக மட்டும் |
இது போன்ற மூலிகை இலைகள் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்
வீட்டிலேயே இருக்கும் பொருட்கள் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் வாங்கிக்
கொள்ளும் பொருட்களைக் கொண்டு ஒரு கசாயம் செய்யலாம்.
- மிளகு
- சுக்கு
- சீரகம்
- கடுக்காய்
- மல்லி
ஆகியவற்றை நன்றாக கொதிக்க வைத்து டீ கசாயம் போல போட்டு இறக்கவும். அதில் மலை தேன் கொஞ்சமாக ஊற்றி குடித்துப் பாருங்கள் காய்ச்சல் உடனடியாக குணமாவதுடன் உடலும் நன்றாக இருக்கும்.
மூலிகை ரொட்டி
எளிமையாக இந்த மூலிகை ரொட்டியை மழைக்காலங்களில் நீங்கள் செய்து சாப்பிடலாம்.
மழைக்காலங்களில் தொடர்ச்சியாக ஒரே வகையான உணவுகளை எடுத்துக் கொள்வதை விட,
ஆரோக்கியத்திற்கும் சீதோசன நிலைக்கும் தகுந்த மாதிரி போல
உணவுகளை எடுத்துக் கொள்வது தான் சிறந்தது.
- பச்சரிசி
- தூதுவளை
- மிளகு
- சீரகம்
- சின்ன வெங்காயம்
ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தோசை சட்டியில் சுட்டெடுத்தால் ஒரு சூப்பர் மூலிகை ரொட்டியை தயார் செய்யலாம். சாப்பிடவும் சுவையாக இருக்கும் சளி தொல்லையும் இல்லாமல் இருக்கும்.
இதையும்
வாசிக்க: உடல் ஆரோக்கியத்தை விட முக்கியம் பல்
ஆரோக்கியம்.

