மொபைல் வாங்கும் முன் இதை கருத்தில் கொள்ளுங்கள்.


புதிதாக மொபைல் போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பல்வேறு நபர்களிடம் அறிவுரை கேட்கிறார்கள். அதேபோல் யூட்யூபிலும் தொடர்ச்சியாக பல ரிவியூகள் பார்ப்பார்கள்.

அவர்கள் கூறுவது போல இருக்கக்கூடிய மொபைல் போன் என்னென்ன பயன்கள் உள்ளன என்று தேடி தேடி பார்ப்பார்கள். இது இன்றைய இளைஞர்களிடம் வாடிக்கையாக இருக்கக்கூடிய ஒன்று. உங்களுக்கான மொபைல் போனை தேர்ந்தெடுப்பது எப்படி என்று வழிகாட்டுவதற்காக தான் இந்த கட்டுரை.

உங்களுக்கான மொபைல் போன்

உங்களுக்கான மொபைல் போன் என்று கூறும் போது முதலில் உங்கள் பட்ஜெட் பற்றி சிந்தித்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் மொபைல் போனில் பிரபலமாக இருப்பது ஆண்ட்ராய்டு, ஐபோன் தான்.

வாங்கினால் ஆண்ட்ராய்ட் இல்லையென்றால் ஐபோன். இரண்டு மென்பொருள்  மட்டும்தான் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. அதனால் பட்ஜெட் தான் மிகவும் முக்கியம். 

ஆண்ட்ராய்டை விட ஐபோன் தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பானது ஆனால் இந்த இரண்டு மென்பொருளையும் விட மிகவும் பாதுகாப்பாக ப்ளாக்பெர்ரி  மொபைல் போன். தற்பொழுது  ப்ளாக்பெர்ரி நிறுவனம் 2016 உடன் மொபைல் போன் உற்பத்தியை நிறுத்திவிட்டது காரணம் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போட்டியை சமாளிக்க முடியாமல் புதிய மொபைல் போன்கள் தயாரிப்பது நிறுத்தியது.

இருக்கின்ற ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு இதில் எது உங்கள் பட்ஜெட்டுக்கு சரியாக இருக்கிறதோ அந்த மொபைல் போனை வாங்கிக் கொள்ளலாம் ஆனால் மொபைல் போன் வாங்குவதில் சில விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அதில் ஒன்றுதான் வெர்ஷன் எந்த வெர்ஷன்   மொபைல் போன் என்பதில் முதன்மை கவனம் செலுத்த வேண்டும் ஏனென்றால் பழைய வெர்ஷன் என்றால் அடுத்த அடுத்த அப்டேட்டுகளுக்கு உகந்ததாக இருக்காது. அதனால் ஆண்ட்ராய்டு, ஐபோனோ புது வெர்ஷன் மொபைல் போனை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் நீங்கள் வாங்கக்கூடிய மொபைல் போன் சில நேரங்களில் விலை குறைவாக இருக்கலாம், விலை குறைவாக இருக்கிறது என்று பழைய வெர்ஷன் வாங்கினால் எதிர்காலத்தில் சில செயலிகள்  உங்களுக்கு செயல்படாமல் போக வாய்ப்பு உண்டு.

கண்டிப்பாக ஜி மொபைல் தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள். அடுத்ததாக கவனிக்க கூடியது கதிர்விச்சு தான். எஸ் ஏ ஆர் எனப்படும் கதிரியக்க சதவீதம் இது மிகவும் முக்கியம் ஏனென்றால் நீங்கள் விலை கூடுதலான அல்லது சிறப்பான கேமரா இருக்கக்கூடிய மொபைலை தேர்ந்தெடுத்து வாங்கலாம் ஆனால் அதில் கதிரியக்கத்தின் அளவு அதிகமாக இருந்தால் நிச்சயம் அது உங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். உங்கள் உடல் நலத்தை பாதிக்க கூடிய ஒரு கதிரியக்கம்  மிகுந்த மொபைலை வாங்குவதை விட எதில் இந்த கதிரியக்கம் குறைவாக இருக்கிறது என்று பார்த்து வாங்குவதுதான் சிறந்தது.

அடுத்ததாக உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான விஷயங்கள் அந்த மொபைல் போனில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பொதுவாக பலரும் முதலில் கவனிப்பது ரேம் தான். ரேம் பொருத்து விலை கூடுதலாகவோ குறைவாக இருக்கும் அதனால் உங்களுக்கு ஏற்ற ரேம் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் ஜிபி ரேம் மேல் தான் பலரும் வாங்க ஆசைப்படுகிறார்கள் ஆனால் நீங்கள் விலை குறைவாக, உங்கள்  செயல்பாடுகள் குறைவாக இருக்கும் பட்சத்தில் அதற்கும் குறைந்த ஜிபி அல்லது ஜிபி பயன்படுத்தினாலும் தவறில்லை இளைஞர்களுக்கு அது உகந்ததாக இருக்காது.

உங்களுக்கு புகைப்படங்கள் எடுப்பது வீடியோ எடுப்பது போன்றவை முக்கியமாக இருந்தால் கண்டிப்பாக கேமராவை பாருங்கள். பிக்சலின் அளவை பார்த்து கேமராவின் தரம் என்பது இருக்காது அது மொபைல் போனை பொறுத்து மாறுபடும்.

கண்டிப்பாக பேட்டரியை கவனியுங்கள். 4500 எம் ஏ ஹச் அளவு இருக்கிறதா அல்லது அதற்கு மேல் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் அப்பொழுதுதான் நீங்கள் பயன்படுத்தும் நேரத்திற்கு ஏற்றார் போல் பேட்டரி இருக்கும். உங்களது பயன்பாடு, பயணங்கள் போன்றவற்றில் பேட்டரி அளவு முக்கியமா என்பதை பற்றி சிந்தித்து கொள்ளுங்கள்.

 எந்த பிராண்ட் மொபைல் வாங்கலாம் என்கின்ற சந்தேகம் அதிகமாக வரக்கூடியது. பொதுவாக மொபைல் ஃபோன்கள் அதிகளவில் சீனா நாட்டிலிருந்து தான் உற்பத்தி செய்யப்படுகிறது. நீங்கள் வாங்க விரும்பும் மொபைல் போன் எந்த நாட்டைச் சேர்ந்தது, எந்த நாட்டின் நிறுவனத்தைச் சேர்ந்த மொபைல் ஃபோனை நாம் வாங்குகிறோம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இவைதான் முக்கியமாக நீங்கள் மொபைல் போன் வாங்கும் போது கவனிக்க வேண்டியது. மற்ற அனைத்துமே உங்கள் தனிப்பட்ட விருப்பம் அதனால் உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு எது சரியாக இருக்குமோ அதை வாங்கலாம். ஆனால் இந்த முக்கியமான விஷயங்களை மொபைல் போன் வாங்குவதற்கு முன்னால் கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும்.

iPhone 16 Plus

Click to buy on Amazon

கருத்துரையிடுக

புதியது பழையவை