உலகில் பல்வேறு வகையான தாவரங்கள் இருக்கின்றன. தாவரங்கள் பொதுவாக பகல் நேரத்தில் ஆக்சிஜனை வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு உட்கொள்ளும்.
அதே போல் இரவு நேரங்களில் கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் ஆக்சிஜனை கிரகிக்கும்
ஆனால் சில தாவரங்கள் பெரும்பாலும் ஆக்சிஜனை மட்டுமே வெளியிடுகிறது. அதில்
முக்கியமான ஒன்று துளசி. இது பெரும்பாலும் ஆக்சிஜனை மட்டும்தான் வெளியிடுகிறது
அதனால் தான் துளசியை வீட்டிற்கு நடுவில் வைத்து வணங்குகிறார்கள்.
வீட்டிற்க்குள்ளேயே துளசி இருந்தாலும் அது ஆக்சிஜனை மட்டும் வெளியிடுவதால்
நமக்கு நேர்மறையான சிந்தனைகள் மட்டுமே
மேலோங்கும். அந்த துளசியில் இருக்கக்கூடிய
மருத்துவ பயன்கள் எண்ணற்ற அளவு இருக்கின்றன. அவற்றின் சிலவற்றை நம்மால் எளிதாக
செய்து பார்க்க முடியும்.
கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த
பூங்கொத்துகளையும் உடைய சிறு செடி தூளாய், துலவம் என்று அழைக்கப்படுவது தான் துளசி.
இதன் இலை, பூ,
விதை ஆகியவை முழுவதும் மருத்துவ பயன் உடையது. துளசியில் பல
வகைகள் உண்டு. நல்துளசி,
கருந்துளசி, செந்துளசி, கல் துளசி, உள்துளசி என பல வகையாக துளசி இனங்கள் உள்ளது. நல் துளசி என்றும்
அழைக்கப்படும் துளசியை மிகுந்த மருத்துவ பயன்கள் உடையது.
1. இதன் இலைகளை சாறு பிழிந்து காலை மற்றும் மாலை வேளைகளில் குடித்து வந்தால்
பசியை அதிகரிக்கும் மற்றும் கல்லீரல் இதயம் ஆகிய உடல் உறுப்பை பலப்படுத்தும்.
மேலும் துளசி சளியை போக்கக்கூடிய ஒரு மிகச் சிறந்த மருந்து.
2. துளசி இலைகளுடன் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து அரைத்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க
வைத்து காய்ச்சி காலை அல்லது மாலை வேளைகளில் குடித்து வந்தால் பித்தம் சரியாகும்.
3. நீரில் துளசி இலைகள், தேயிலை தூள் ஆகியவற்றை கொதிக்க வைத்து வடிகட்டி அதில் தேன் கொஞ்சம் இட்டு குடித்தால் சுவையான துளசி தேனீர் தயாராகிவிடும். மழைக்காலங்களில் சளி காய்ச்சல் போன்ற நேரத்தில் இது போன்ற புதுமையான தேனீரை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
4. துளசி, மிளகு,
சீரகம் ஆகியவற்றை அரைத்து கொதிக்க வைத்து எடுத்தால்
காய்ச்சல் குணமாவதற்கான கசாயம் தயாராகிவிடும்.
5. வெயில் காலங்களில் துளசியை இரவு நேரத்தில் குளிர்ந்த நீரில் துளசி இலைகளை போட்டு மூடி வைத்துவிட்டு மறுநாள் காலை அந்த
துளசி நீரை நாம் குடிக்கும் பொழுது அதில் இருக்கும் அத்தனை பயன்களும் நமக்கு
கிடைக்கும்.
பலரும் துளசி காய்ச்சல்,
சளி, இருமல் ஆகியவற்றிற்கு மட்டும்தான் நன்மை என்று நினைத்து இருப்பார்கள் ஆனால்
நம்முடைய கல்லீரல் மற்றும் இதயம் பலவீனம் அடையாமல் இருப்பதற்காகவும்,
உள்ளுறுப்புகள் நன்றாக இயங்குவதற்கும் துளசி பெரிதும்
பயன்படுகிறது.
