ஆதாரை வயது சான்றிதழாக பயன்படுத்த முடியாது உச்ச நீதிமன்றம்.

ஆதாரை வைத்து ஒருவரின் வயதை நிர்ணயிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் விளக்கம் கூறியுள்ளது. வழக்கு ஒன்றில் விளக்கம்  அளித்துள்ள உச்சநீதிமன்றம் ஒருவருடைய வயது என்பது அவருடைய பள்ளி சான்றிதழில் இருக்கும் வயதை தான் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் ஆதார் அடையாள அட்டையில் இருக்கக்கூடிய வயதை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளது.

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2018 இல் ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளது அந்த உத்தரவின் படி ஆதார் என்பது ஒருவருடைய அடையாள ஆவணம் மட்டுமே ஆகும். அதை வைத்து பிறந்த தேதியை உறுதி செய்வதற்கான ஆவணமாக பயன்படுத்த முடியாது என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இதைப் பற்றி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்கனவே ஆதார் என்பது ஒருவருடைய அடையாளம் தானே தவிர அவருடைய பிறந்த தேதி, வயது ஆகியவற்றை இதை வைத்து உறுதி  செய்ய கூடாது எனவும் கூறியிருக்கிறது.

அதேபோல் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஒரு நபரின் பிறந்த தேதியை சரி பார்ப்பதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆவணங்கள் பட்டியலில் இருந்து ஆதாரை நீக்குமாறு கூறியிருக்கிறது.

இந்த ஆதார் அடையாள அட்டை ஒருவருடைய அடையாளம் சான்று மட்டுமே எனவும் பிறந்த தேதிக்கான சான்று அல்ல என்று ஏற்கனவே கூறியுள்ளது. தற்பொழுது மீண்டும் உச்சநீதிமன்றம் இதை உறுதி செய்துள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை