இந்த நவீன யுகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருத்துகளை பற்றி விஞ்ஞானிகளோ அல்லது அறிவியல் ஆர்முடையவர்களோ சிந்திப்பது என்பது இயல்பான ஒன்று.
ஆனால் சங்க காலம் தொட்டே தமிழர்கள்
அறிவியலைப் பற்றி அதிகமாக சிந்தித்து இருக்கிறார்கள் என்பதற்கு பல்வேறு விதமான சான்றுகள்
உள்ளன.
புலவர்களும் அறிஞர்களும் அறிவியல் பற்றி சிந்தித்ததை பல்வேறு இலக்கியங்களில்
பதிவு செய்துள்ளார்கள். சங்க இலக்கியம் வெறும் தமிழருடைய மாண்பையும்,
மரபையும், பண்பாட்டையும் மட்டும் விளக்குவது அல்ல.
தமிழின் சிறப்பு, தமிழ் மொழியின் சிறப்பும், தமிழ் இலக்கியத்தின் சிறப்பை மட்டும் சங்க இலக்கியங்கள்
வெளிப்படுத்துவதில்லை. அதையும் தாண்டி தமிழருடைய அறிவியலை இந்த உலகிற்கே
வெளிக்காட்டக்கூடிய மிகச்சிறந்த இலக்கியமாக
திகழ்கிறது.
இன்றைய நவீன யுகம் என்பது வியக்கத்தக்க தொழில்நுட்ப சாதனைகளை புரிந்துள்ளது.
உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கக்கூடிய தகவல்களை ஒரு நொடியில் நாம் தெரிந்து
கொள்ளலாம்.
அறிவியலும் தொழில்நுட்பமும் மிகப்பெரியதாக வளர்ந்து விட்ட இந்த காலத்தில்
உலகம் சுருங்கி விட்டது என்று கூறலாம். மனித வாழ்க்கை என்பது அறிவியல்
தொழில்நுட்பம் வளரும் போது தான் முன்னேற்றம் அடைகிறது.
அந்த வளர்ச்சி சங்ககாலம் தொட்டு தமிழரிடமும் இருந்திருக்கிறது. அந்த வளர்ச்சி
பற்றிய எண்ணமும் சிந்தனையும் அவர்களிடம் இயல்பாகவே அமைந்திருக்கின்றது என்று
கூறலாம்.
மனித வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குத் தேவையான புதிய புதிய
கருவிகளை தொழில்நுட்பத்தை காலத்தாலும் தன் சிந்தனையாளும் மனிதன் எப்படியோ
கண்டுபிடித்து விடுகிறான். ஏனென்றால் உணவு தேவை போல அவன் வாழ்வியலில் தொழில்நுட்ப
தேவையும் அடிப்படையாகி விடுகிறது.
சக்கரத்தின் கண்டுபிடிப்பும் நெருப்பின் கண்டுபிடிப்பும் அப்படி ஒன்றுதான். இந்த
உலகம் இரும்பை கண்டுபிடித்து எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிந்தித்துக்
கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த இரும்பை கொண்டு கருவிகள் செய்து செழிப்பாக
வாழ்ந்து கொண்டிருந்தார்கள் தமிழர்கள்.
இதற்கு ஆதாரமாக சங்க இலக்கியங்கள் கருவிகளைக் கொண்டு உவமையாக சுட்டிக்காட்டி
சில பாடல்களில் பதிவு செய்துள்ளன. இரும்பு கருவிகள் மக்கள் தேவைக்கேற்ப
பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது இந்த இலக்கியத்தின் மூலம் நமக்குத் தெரிகிறது.
தமிழர் வரலாற்றில் ஆரம்பம் காலம்
தொட்டு இரும்பின் கண்டுபிடிப்பு என்பது மிக முக்கியமானதாக இருந்து வந்திருக்கிறது.
இதைப்பற்றி தமிழ் இலக்கியங்கள் தீக்கடைகோல் என்று பதிவு செய்கின்றன.
இரும்பின் கண்டுபிடிப்பு அதன் பயன்பாடு ஆகியவற்றை பதிவு செய்துள்ளது.
பண்டைய தமிழர்கள் இரும்பு தொழில் நுட்பத்தில் மிகச் சிறந்தவர்களாக
இருந்திருக்கிறார்கள் என்பதற்கு பல இலக்கியச் சான்றுகள் உண்டு. வேளாண் கருவிகளும்
போர் கருவிகளும் செய்யும் தொழில்கள் பெருகி இருந்திருக்கின்றது.
இதை பார்த்த பல்வேறு புலவர்கள் அதை
தங்கள் பாடல்களில் சேர்த்து உள்ளார்கள். அதைப் பற்றிய உவமை,
சிந்தனை ஆகியவற்றை
இலக்கிய வடிவில் பதிவு செய்துள்ளார்கள்.
ஒரு நண்டை பற்றி பாட வந்த புலவன், கொல்லன் உடைய உலைக்களத்தையும் அவன் பயன்படுத்தும்
துருத்தியையும், கொறடையும்
உவமையாக குறிப்பிடுகிறான்.
நண்டின் கால் கொறடு போல பிளவுபட்டதாக இருக்கின்றது என்று உவமைப்படுத்தி
இருக்கிறார். "மென் தோல் மிதிஉலைக்
கொல்லன் முறி கொடிற்று அன்ன
சுவைத்தாள் அலவன்" என்கிறது பெரும்பாணாற்றுப்படைகளின் வரிகள்.
ஒரு நண்டை பற்றி பாட வந்த புலவன் அதன் கால்களை கொறடு போல பிளவு பட்டதாக
கூறுவதன் மூலம் பழந்தமிழர் காலத்தில் பல்வேறு வகையான கருவிகள் இருந்ததும் அவற்றை
இயல்பாக பரவலாக அவர்கள் பயன்படுத்தியதும் உவமையாக இந்த புலவர்
பெரும்பாணாற்றுப்படையில் எழுதியதன் மூலம் நமக்கு தெரிகின்றது. பல்வேறு சங்க
இலக்கியங்களில் இப்படி தமிழர்களுடைய அறிவியல் சிந்தனை என்பது இயல்பாகவே
தென்படுகிறது.
