இந்தியாவில் அதிகம் பணம் சம்பாதிக்கும் ஐந்து விளையாட்டுகள்.

தினமும் வேலை செய்து நாள் முழுவதும் வேலையைப் பற்றிய சிந்தித்து பணம் சம்பாதிப்பவர்கள் பணியாளர்கள். புதிதாக தொழில் தொடங்கி அதில் தன்னுடைய பணத்தை முதலீடு செய்து வாழ்க்கையின் முழு நேரத்தையும் தன் தொழிலில் செலவழிப்பவர்கள் தொழிலதிபர்கள்.

இவர்களையும் தாண்டி அதிகமாக பணம் சம்பாதிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சினிமா மற்றும் விளையாட்டு போன்றவற்றில் அளவுக்கு அதிகமாக பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள். இது அவர்களுடைய திறமை மற்றும் ஆர்வம்  என்கின்ற அடிப்படையில் வருகின்ற வருமானம்.

இந்த கட்டுரையில் இந்தியாவில் எந்த விளையாட்டுகளில் விளையாட்டு வீரர்கள் அதிகமான பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள் எந்த விளையாட்டு துறையில் இருந்தாலும் அவர்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் பட்சத்தில் நிச்சயமாக நிறைவே பணம் சம்பாதிக்கலாம்.

விளையாட்டு வீரர்கள் பலவகையில் பணம் சம்பாதிக்கிறார்கள் அவர்களுக்காக கிடைக்கும் விளம்பரங்கள் மற்றும் நிதியுதவிகள் (Sponsorship) போன்றவற்றின் மூலமாகவும் பணம் சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் விளையாடுவதற்காக எவ்வளவு ஊதியம் பெறுகிறார்கள் என்பது அவர்களுடைய அடிப்படை வருமானமாக மாறுகிறது. இந்த கட்டுரையில் அவர்கள் விளையாடுவதற்காக மட்டுமே அந்தந்த விளையாட்டு குழுமங்களில் இருந்து எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

கூடைப்பந்து

இந்தியா 1951 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கூடைப்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறது. இன்று வரை பல்வேறு ஆசிய போட்டிகளில் இந்தியா பங்கெடுத்துள்ளது.

இந்தியா 2014 ஆசிய கோப்பையில் சீனாவை தோற்கடித்து எண்பது ஆண்டு கால வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் இந்திய அணி 2015, 2016, 2017 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் தெற்காசிய சாம்பியன்ஷிப்புகளை பெற்று, தெற்காசிய அளவில் இந்தியா கூடைப்பந்து போட்டியில் மிகச் சிறந்த நாடாக உள்ளது.

 கூடைப்பந்து விளையாட கூடிய இந்திய விளையாட்டு வீரர்கள் இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு என்கின்ற இந்த குழுமத்தின் மூலம் விளையாடுகிறார்கள். இவர்கள் ஏ மற்றும் பி என்ற இரண்டு பிரிவாக இருக்கிறார்கள். இதில் ஏ பிரிவை சேர்ந்த வீரர்களுக்கு ஒரு லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது அதைப்போல் பி பிரிவில் உள்ள வீரர்கள் 50,000 வரை சம்பளம் பெறுகிறார்கள்.

கைப்பந்து 

இந்தியாவில் கைப்பந்து  கூட்டமைப்பானது 1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இந்திய கைப்பந்து கூட்டமைப்பு  இதனை நிர்வகித்தாலும் இந்த விளையாட்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கட்டுப்பட்டது.

இந்தியாவில் கைப்பந்து வீரர்கள் சர்வதேச வீரர்கள், பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பிரிவுகளாக உள்ளார்கள். இவர்களின் பிரிவிற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது. சராசரியாக ஒரு கைப்பந்தாட்ட வீரர் இரண்டரை லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார்.

1986 ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கைப்பந்து அணி வெண்கல பதக்கம் வென்றது.  இதில் விளையாடும் வீரர்களுக்கு போதிய சம்பளம் தரப்படுகிறது.

கபடி

இது தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. தமிழ்நாட்டின் பூர்வீக விளையாட்டு ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு விளையாட்டு தான் கபடி. இது பண்டைய தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டு என்பது நமக்கு தெரியும்.

ஜல்லிக்கட்டு விளையாடுவதற்கு முன் இளைஞர்கள் பயிற்சி செய்வதற்காக உருவாக்கப்பட்ட விளையாட்டு தான் கபடி. எதிர்வரும் வீரரை ஒரு ஜல்லிக்கட்டு காளை போல நினைத்து அவரை எப்படி பிடிக்க வேண்டும் என்று விளையாடுவது தான் கபடி.

இந்தியா கபடியில் உலக அளவில் மிகச்சிறந்த நாடாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதுவரை நடந்த கபடி உலக கோப்பைகளில் இந்தியாவே வென்றுள்ளது. 1950 ஆம் ஆண்டு இந்தியாவில் அனைத்து இந்திய கபடி கூட்டமைப்பு என்று உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 1972 ஆம் ஆண்டு அமைச்சூர் கபடி கூட்டமைப்பை இந்தியா உருவாக்கியது. இந்த அமைப்பானது இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்புக்கு கட்டுப்பட்டது.

2004 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பை கபடி போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்தியாவே  உலக கபடி சாம்பியனாக இருந்து வருகிறது.

பல்வேறு நாடுகள் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது நிலையில் உள்ளது. ஆனாலும் இந்தியாவே தொடர்ந்து உலக கபடி சாம்பியனாக இருக்கின்றது. கபடி போட்டியில் விளையாடும் ஒரு வீரருக்கு அவரின் திறமை மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப 30 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.

கிரிக்கெட்

இந்தியாவில் கிரிக்கெட் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இந்தியர்கள் சுதந்திரத்திற்கு முன்னரே கிரிக்கெட் விளையாட தொடங்கி விட்டார்கள் அதனால் தான் இன்றளவும் கிரிக்கெட் இந்தியர்களிடம் மிகவும் பிரபலமான ஒரு விளையாட்டாக இருந்து வருகிறது.

 இந்தியாவில் எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் கிரிக்கெட்டுக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதற்கு காரணம் அதன் சுவாரஸ்யம் மட்டுமல்ல சுதந்திரத்திற்கு முன்பிருந்தே கிரிக்கெட் ரசிகர்கள் உருவானதும் ஆகும்.

 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 1928 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு கொண்டு வருகிறது. இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றி என்பது சென்னையில் 1952 ஆம் ஆண்டு இந்திய அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களே அதிகமான வருமானம் ஈட்டுகிறார்கள் காரணம் இவர்கள் கிரிக்கெட் போட்டியில் பிரபலமாக மாறுவதும் அதனால் கிடைக்கக்கூடிய விளம்பரங்கள் மற்றும் ஐபிஎல் போன்ற போட்டிகளில் கிடைக்க கூடிய வருமானம் ஆகியவை அவர்களுக்கு அதிகப்படியான வருமானத்தை தருகின்றது.

 பொதுவாக இந்திய கிரிக்கெட் அணியில் A+, A, B, C என நான்கு வகையாக விளையாட்டு வீரர்கள் பிரிக்கப்படுகிறார்கள். இதில் A+ வீரர்கள் வருடத்திற்கு 7 கோடி வரை சம்பளம் தருகிறார்கள்.

A வீரர்கள் 5 கோடி வரையிலும் B வீரர்கள் 3 கோடி வரையிலும் C வீரர்கள் ஒரு கோடி வரையிலும் சம்பளம் பெறுகிறார்கள். ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட வீரருக்கு 15 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.

ஒரு நாள் போட்டியில் விளையாட ஆறு லட்சமும், 20/20 போட்டியில் விளையாட மூன்று லட்சமும் சம்பளமாக தரப்படுகிறது. உள்ளூர் போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு 40 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் வரை சம்பளமாக தரப்படுகிறது.

பேட்மிண்டன்

இந்தியாவில் 1934 ஆம் ஆண்டு இந்திய பேட்மிண்டன் சங்கம் உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டு இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு விளையாட்டாக இருந்து வருகிறது.

சாய்னா நேவால் ஒலிம்பிக் போட்டிகளில் முதல் வெண்கல பதக்கத்தை இந்தியாவுக்காக பெற்று தந்தார். P.V.  சிந்து 2019 ஆம் ஆண்டு சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் உலக சாம்பியன் ஆக வெற்றி பெற்றார்.

ஒலிம்பிக் போட்டிகளிலும் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். பேட்மிண்டன் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு ஒரு லட்சம் முதல் 70 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.

இந்த விளையாட்டுகளையும் தாண்டி இந்தியாவில் விளையாடப்படும் மற்ற விளையாட்டுகளிலும் வீரர்கள் நிறைவே பணம் சம்பாதிக்கிறார்கள். அது அவர்களுக்கு கிடைக்க கூடிய நிதியுதவிகள் மூலம் வருமானம் பெறுகிறார்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை