கரப்பான் பிரச்சனைக்கு ஓர் இயற்கை தீர்வு.


கரப்பான் பிரச்சனை ஒரு சிலருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். தொடர்ச்சியாக அரிப்பு, புண்கள் இதனால் மிகுந்த எரிச்சல் உணர்வதை உடன் வாழ்வதாக இருக்கும். பிடித்த உணவுகளை சாப்பிட முடியாது.

கருவாடு, மீன், முட்டை, கத்தரிக்காய் என எந்த உணவு பொருள்களையும் எடுத்துக் கொள்ள முடியாது. பொதுவாக அசைவ உணவுகளை கரப்பான் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட முடியாது. இந்த கரப்பான் பிரச்சனையை சரி செய்ய எளிதான இயற்கை மருந்துகள் உண்டு.

வெளிப்புறத்தில் தடவ வேண்டிய மூலிகைகள்.

கரப்பான் பாதிக்கப்பட்ட புண்களில் இளம் சூடான தண்ணீரில் கழுவ வேண்டும். குப்பைமேனியை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வரவும்.

 பொதுவாக மஞ்சள் பொடிகளை கொண்டு புண்களை கழுவுவதும் மஞ்சளை அரைத்து ஊற வைத்த பின் புண்களை கழுவுவதும் இந்த கரப்பான் பிரச்சனையை சரி செய்ய ஒரு சிறந்த வழி. இதைத் தாண்டி கரப்பான் பிரச்சனையை சரி செய்ய வல்லாரை மிகவும் பயன்படுகிறது.

வல்லாரை இலைகளை விழுதாக அரைத்து புண்களின் மேல் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை பத்து போட வேண்டும் இவ்வாறு போட்டால் புண்கள் சரியாகும்.

உணவின் மூலம் எடுத்துக்கொள்ள வேண்டிய மூலிகைகள்.

 சிவனார் வேம்பு சூரணம் 1/4 தேக்கரண்டி எடுத்து பசும்பாலில் கலந்து தினமும் குடித்து வர கரப்பான் பிரச்சனை குணமாகும்.

கரிசாலைக்கற்பம் ஒரு கிராம் அதனுடன் தேனும் சேர்த்து இருவேளை வீதம் கொடுக்க கரப்பான் புண் ஆறும்.

கிரந்திநாயகம் என்னும் மூலிகை பத்து கிராம் எடுத்து விழுதாக அரைத்து 200 மில்லி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் கரப்பான் பிரச்சனை குணமாகும். 

பொன்னாவரை சூரணம் ஒரு கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து குடித்து வர கரப்பான் பிரச்சனை குணமாகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை