நம்முடைய வாழ்வியல் பழக்க வழக்கங்கள் சரியில்லை என்றாலும், சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும், நமக்கு கல்லடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
நாம் உண்ணும் உணவிலும்
குடிக்கும் நீரிலும் இருக்கக்கூடிய கால்சியம் சத்துக்கள் சிறுநீர் மூலம் வெளியேற
வேண்டும் அப்படி வெளியேறாவிட்டால் சின்ன சின்ன கட்டிகளாக உருவாகி சிறுநீர்
கட்டிகளாக மாறிவிடுகிறது.
நாம் தினமும் எவ்வளவு தண்ணீர்
குடிக்க வேண்டும் என்பதை நம் உடலின் எடை தான் முடிவு செய்கிறது. ஒவ்வொருவரும்
மூன்று லிட்டர் அல்லது ஐந்து லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும் என்ற
அவசியம் இல்லை.
நம் உடலின் எடைக்கு ஏற்றார் போல்
தண்ணீர் குடிக்க வேண்டும். உடலின் எடை அதிகமாக இருக்கும் பட்சத்தில் நாம் குடிக்கும்
தண்ணீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும். இல்லை என்றால் இது போன்ற கல்லடைப்பு
பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
அதேபோல் நாம் குடிக்கும்
நீரிலும் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருந்தால் நமக்கு கல்லடைப்பு ஏற்படலாம். இயற்கை
உணவு முறையால் இந்த கல்லடைப்பு பிரச்சனையை எளிதில் சரி செய்து விடலாம்.
சாதாரணமாக மழைக்காலத்தில் வளர்ந்திருக்கும்
செடிதான் நெருஞ்சில். இந்த நெருஞ்சில் செடியை வேருடன் புடுங்கி கழுவி ஒரு லிட்டர்
தண்ணீரில் போட்டு காய்ச்சி ஒரு கசாயமாக தயார் செய்து கொள்ள வேண்டும். கல்லடைப்பு
பாதிக்கப்பட்டவர் தினமும் காலையில் இதைக் குடித்து வரலாம்.
சிறிது நாட்களில் நிச்சயம்
கல்லடைப்பு பிரச்சினைகள் குணமாகும். மருதம் பட்டை சூரணம் ஒரு தேக்கரண்டி எடுத்து
ஒரு குவளை தண்ணீரில் போட்டு கசாயமாக காய்ச்சி தினமும் ஒருவேளை மட்டும் குடித்து
வந்தால் கல்லடைப்பு குணமாகும்.
இதைத் தாண்டி கல்லடைப்பு
பிரச்சனை அதிகமாக உள்ளவர் இயற்கை கசாயம் ஒன்றை தயார் செய்து குடித்தால் நிச்சயம்
கல்லடைப்பு குணமாகும்.
- நெருஞ்சில் வேர்
- சிறு பூளை வேர்
- மாவவிலங்கு
- பேராமுட்டி
மேற்கண்ட இந்த நான்கு மூலிகையையும்
கசாயமாக காய்ச்சி தினமும் குடித்து வர வேண்டும். மிகப் பெரிய கல்லடைப்பு பிரச்சனை இருப்பவர்களுக்கு இதை குடிக்கும் போது
குணமாகும். இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த
பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் கீழ்க்கண்ட இந்த மூன்று மூலிகைகளையும் கசாயமாக
காய்ச்சி குடித்து வரலாம்.
- நெருஞ்சில் வேர்
- சிறுகீரை வேர்
- சீரகம்
இதன் மூலம் எளிமையாக நம்முடைய
சுற்றுப்புறத்தில் இருக்கக்கூடிய மூலிகை மூலம் கல்லடைப்பை சரி செய்யலாம். பொதுவாக
நெருஞ்சி கல்லடைப்பு ஒரு சிறந்த தீர்வாக இருக்கின்றது. நெருஞ்சில் கிடைக்கவில்லை
என்றால் நாட்டு மருந்து கடைகளில் நெருஞ்சில் பொடி வாங்கி இளம் சூடான தண்ணீரில்
கலந்து குடித்து வரலாம் இதுவும் நல்ல பலன் அளிக்கும்.
இதையும்
வாசிக்க: உடல் ஆரோக்கியத்தை விட முக்கியம் பல்
ஆரோக்கியம்.
