ஏனென்றால் பொதுமக்கள் குறைந்த
விலையில் எக்ஸ்ரே பயன்பாட்டு பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் இதற்காக
அவர் எந்த காப்புரிமையும் பெறவில்லை.
ஒருவேளை அவர் காப்பரிமை பெற்றிருந்தால்
மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆகிருக்கலாம். ஆனால் பல நோயாளிகளின் சிரமங்களை மனதில்
வைத்து அவர் இந்த கண்டுபிடித்து பெருமையை மட்டுமே வைத்துக் கொண்டார் காப்புரிமை
வாங்கவில்லை.
பல நாட்கள் கஷ்டப்பட்டு
ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ராண்ட்ஜென்
திடீரென்று வந்த ஒரு ஒளிக்கற்றையை என்னவென்று தெரியாமல் ஆராய்ச்சி செய்தார். அந்த
ஒளிக்கற்றைக்கு எக்ஸ்ரே என்று பெயரிட்டார். அதை தொடர்ந்து ஆராய்ச்சி செய்யும் போது
தான் தெரிந்தது இந்த ஒளிக்கற்றை மனித உடலில் ஊடுருவி செல்லக்கூடியது.
அதே சமயத்தில் எலும்புகளின் இந்த ஒளிக்கட்டையால்
ஊடுருவி செல்ல முடியாது அதனால் மனித உடலில் உள்ள எலும்புகள் தனியாக ஒரு நிழல் படம்
போல் தெரியும். இதை வைத்து எலும்புகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை எளிதாக சரி
செய்து விடலாம்.
இந்த அரிய கண்டுபிடிப்பை
கண்டுபிடித்துக் கொடுத்த ராண்ட்ஜெனின் ஒரே விருப்பம் என்னவென்றால் அவரது மனைவியின்
கைவிரலை அவர்களுடைய திருமண மோதிரத்துடன் எக்ஸ்ரே எடுத்து பார்ப்பதுதான்.
ஆம்! உலகில் முதன்முதலாக எடுக்கப்பட்ட எக்ஸ்ரே அதை கண்டுபிடித்த ராண்ட்ஜென் அவர்களின் மனைவியுடைய கைவிரல் எலும்புகள் தான். அவர்கள் திருமணம் மோதிரத்துடன் கூடிய அந்த நிழற்படம் தான் அவர் ஆசைப்பட்டது.
