பாரதப்போரில் பங்கு கொண்ட சேர மன்னன் யார் தெரியுமா?

பண்டைய தமிழ் மன்னர்களை பற்றி நாம் அதிகம் படித்திருப்போம் ஆனால் பாண்டியர்கள் சோழர்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் பலரும் பேசினாலும் சேரர்களைப் பற்றி பேசியது மிகக் குறைவு ஆகும்.

ஏனென்றால் சேரர்கள் பற்றிய தகவல்கள் நமக்கு குறைவாகவே கிடைத்திருக்கின்றது. பதிற்றுப்பத்தின் பாட்டுடைத் தலைவனாக இருப்பவன் உதியஞ்சேரல் என்னும் அரசன். சங்க கால பாடல்களில் இந்த மன்னனை பற்றிய பல்வேறு தகவல்கள் இருக்கின்றன.

மன்னர்கள் செய்த சாகசங்கள் வீர செயல்கள் ஆகியவை சங்கு இலக்கியங்களில் எழுதப்பட்டுள்ளன. பாரதப்போரில் பங்கு கொண்டவராக கருதப்படுவார் தான் இந்த உதியஞ்சேரல் என்னும் மன்னன் ஆவான்.

பாரதப் போரில் கலந்து கொண்ட சேனைகளுக்கு பெருஞ்சோறு வழங்கினான் இம்மன்னன் என்கின்ற தகவல் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. பாரதப்போரில் சோறு வழங்கியவன் இந்த சேர மன்னனா? என்கின்ற விவாதமும் ஆய்வாளர்களிடையே இருக்கின்றது.

இந்த உதியஞ்சேரல் மன்னனின் மகன் தான் இமயவர்மன். இவன் அரபிக் கடலில் கடற்கொள்ளை நடத்தி வந்த கடம்பர்களை வென்று  அவர்களின் கடம்ப மரத்தைக் கொண்டு வெற்றி கொடி நாட்டியவன். வட இந்தியாவில் இமயமலை வரையிலும் படையெடுத்துச் சென்று ஆரிய மன்னர்களை வெற்றி கொண்டவன். இவனைப் பற்றிய பல்வேறு தகவல்கள் குமட்டூர் கண்ணார் பாடிய பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ளது.

சேர மன்னர்கள் என்று சொன்னாலே அதில் மிகவும் சிறப்பாக விளங்குபவன் சேரன் செங்குட்டுவன் ஆவான். இவன் இமயவர்மனுக்கு மகனாகப் பிறந்தவன் சோழ மன்னன் கிள்ளிவளவனுக்கு போர் துணையாக இருந்து வந்தவன் தான் சேரன் செங்குட்டுவன்.

அந்த காலத்தில் அனைத்து மன்னர்களும் போரிட்டுக் கொள்வதில்லை மன்னர்கள் தங்களுடைய நட்பு பாராட்டியும் வந்தார்கள். அதற்கு உதாரணம் தான் கரிகாலன் இறந்த பிறகு அவனுடைய மகன் கிள்ளிவளவன் அரசு கட்டிலில் அமரக்கூடாது என்று சில சோழ இளவரசர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். அப்போது அந்த கிள்ளி வளவனுக்கு போரில் துணை புரிந்து முடிசூட்ட உதவி செய்தான் சேரன் செங்குட்டுவன்.

சேர மன்னர்களில் புகழ்பெற்றவனாக இருப்பவன் பெருஞ்சேரல்  இரும்பொறை ஆகும். செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற சேர மன்னனை பற்றி கபிலர் பாடிய பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவனின் மகன் தான் இந்த பெருஞ்சேரல்  இரும்பொறை என்பதாகும்.

தகடூர் என்ற இடத்தில் நிகழ்ந்த போரில் சோழ மன்னனை முறியடித்து மிகப்பெரிய வெற்றியை அடைந்தான் இவன். இவனுடைய போர் திறனை வியந்து புலவர்கள் பாடிய நூல்தான் தகடூர் யாத்திரையாகும்.

இந்த நூல் இப்பொழுது தமிழ் ஆய்வாளர்களிடம் இல்லை. பெருஞ்சேரல்  இரும்பொறை தமிழ் புலவர்களை பெரிதும் பாராட்டி அவர்களுக்கு பரிசளித்து வந்தான். அதனால் தான் இவனுடைய வீரப்பராக்கரங்கள் அனைத்தும் வரலாற்றில் எழுதப்பட்டு வந்தது.

பதிற்றுப்பத்தின் ஒரு பாட்டின் தலைவன் இந்த பெருஞ்சேரல்  இரும்பொறை ஆவான். இவன் கோப்பெருஞ்சோழனையும், பாண்டியர்களையும் பல்வேறு குறுநில மன்னர்களையும் போரில் வென்றதால் சேர மன்னர்களில் மிகவும் வெற்றியாளனாக பாராட்டப்படுபவன்.

கருத்துரையிடுக

புதியது பழையவை