![]() |
பொதுவான மூலிகைகள் புரிதலுக்காக மட்டும் |
இந்த மூலிகை இலை சாறுகளை சிலர்
குடிக்கும்போது அது கசப்பாக இருந்தால் உடனடியாக குடித்துவிட்டு தண்ணீரை குடித்து
விட்டு சர்க்கரையை வாயில் போட்டு ஒரே கசப்பாக இருக்கிறது என்பார்கள். ஆனால் இது
போன்ற பழக்கம் மூலிகை இலைச்சாறு தரும் பயனை குறைக்கிறது ஏனென்றால் அந்த
மூலிகைகளைச் சாறு எப்படி இருந்தாலும் அதை விரும்பி சுவைத்துக் குடிக்க வேண்டும்
அப்பொழுதுதான் அதனுடைய முழு பலனும் நமக்கு கிடைக்கப்பெறும்.
அருகம்புல்
பல்வேறு நோய்களுக்கு இந்த
அருகம்புல் சாறு மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றது. உடலுக்குள் புது ரத்தம்
உருவானது போல அதிக சத்துக்களை அளிக்கவல்லது. ரத்தத்தை சுத்தம் செய்து
நரம்புகளுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. இருமல், வயிற்று வலி,
மூட்டு வலி, இதய
கோளாறு, தோல்
வியாதிகள் அனைத்தும் நீங்குகிறது.
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை
அதிகரித்து உடலுக்கு நன்மை பயக்குறது. இது உடலுக்கு மட்டும் நன்மை பயக்குவது அல்ல
நம்முடைய பல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாய் துர்நாற்றம்
இருக்காது பல்லில் எந்த விதமான நோய்களும் ஏற்படாது.
அதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை
நோயை கட்டுப்படுத்தக்கூடியது,
ஆஸ்துமா, ரத்த
அழுத்தம் என அனைத்து பிரச்சனைகளையும் குணமாக்கக்கூடிய மிகச்சிறந்த மூலிகை தான்
இந்த அருகம்புல். இதை தினமும் அருந்தும் பழக்கம் உடையவர்கள் நோயற்ற மனிதர்களாக வாழ
வாய்ப்புள்ளது.
இதையும் வாசிக்க: கரப்பான் பிரச்சனைக்கு ஓர் இயற்கை தீர்வு
துளசி இலை
காய்ச்சல், இருமல், ஜீரணக்
கோராறு போன்றவற்றுக்கு இந்த துளசி இலை சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
துளசியிலே பற்றி சிலர் அறியாத ஒரு விஷயம் காது வலியை நீக்கி காதில் ஏற்படும்
பிரச்சனைகளை குணமாக கூடியதுதான் துளசி இலை. துளசி இலையை நீங்கள் சாப்பிட்டு
வந்தாலும் சரி அல்லது இலைச்சாறு குடித்து வந்தாலும் சரி உங்கள் ரத்தம் சுத்தம்
செய்யப்படும்.
தூதுவளை இலை
மார்புச்சளிக்கு மிகப்பெரிய
மருந்து தான் இந்த தூதுவளை சாறு. சளி, காய்ச்சல் என
அனைத்துக்கும் இது மிகவும் பயனுள்ளது. பலருடைய எண்ணம் தூதுவளை என்பது சளியை
மட்டும் போக்கவல்லது என்பதுதான்.
ஆனால் இந்த தூதுவளைச் சாறை
நீங்கள் குடிக்கும் போது நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் இருக்கும், வல்லாரைக்
கீரை மட்டும்தான் நினைவாற்றலை அதிகரிக்கும் என்று பலரும் நினைத்திருக்கலாம் ஆனால்
மூளை வளர்ச்சிக்கும் நினைவாற்றல் அதிகரிப்பதற்கும் மிகவும் பயனுள்ளது தான் தூதுவளை.
மஞ்சள் கரிசலாங்கண்ணி
நம்முடைய உடல் பளபளப்பாக இருக்க
வேண்டும் நம்முடைய தோல் நன்றாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு மிகச் சிறந்த மருந்து
தான் மஞ்சள் கரிசலாங்கண்ணி. கண்பார்வை கூர்மை அடைவதற்கு மஞ்சள் கரிசலாங்கண்ணி
மிகவும் பயன்படுகிறது.
மூளைக்கு சுறுசுறுப்பை தந்து ஒரு
தெளிவான மனோநிலையை உருவாக்கக் கூடியது தான் இந்த கரிசலாங்கண்ணி. பொதுவாக
கரிசலாங்கண்ணி காமாலை நோயை தீர்க்கக் கூடியது. சில மூலிகைகளில் பலருக்கும் தெரியாத
அற்புதமான விஷயங்கள் இருக்கும் அது போல தான் இதில் மூளையை நன்றாக வைத்துக்
கொள்ளும் தன்மை உள்ளது.
பொன்னாங்கண்ணி இலை
பொன்னாங்கண்ணி என்றவுடன் அந்த
பெயரிலே இருக்கும் இதில் தங்கத்தின் தாதுக்கள் இருப்பதாக சில சித்தர்கள்
கூறியிருக்கிறார்கள். தொடர்ந்து பொன்னாங்கண்ணியை சாப்பிட்டு வருபவர் தூரத்தில்
இருக்கக்கூடிய நட்சத்திரத்தைக் கூட தெளிவாக பார்க்க முடியும். அந்த அளவுக்கு கண்
பார்வைக்கு மிகவும் பயன்பட கூடியது தான் பொன்னாங்கண்ணி. உடலில் உள்ள வாத நோய்களை
குணமாக்க கூடிய தன்மை வாய்ந்தது.
இந்த
மூலிகைகள் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் அந்த மூலிகை
பொடியை வாங்கி பயன்படுத்துங்கள்.
