முதலில் பணவீக்கம் என்றால் என்ன
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் பணப்பழக்கம் அதிகமாக இருக்கும்
ஆனால் உற்பத்தியான பொருட்கள் தேவையை விட குறைவாக இருக்கும் எனவே பொருட்களின் விலை
அதிகரிக்கும். மக்களிடையே பணப்பழக்கத்தில் வரக்கூடிய பணத்தின் மதிப்பை விட
விலையானது கூடிக்கொண்டே போனால் அதை பணவீக்கம் என்று கூறுகிறார்கள்.
பணப்புழக்கம் அதிகமாக
இருந்தாலும் பணத்தின் மதிப்பானது குறைவாக இருக்கும் ஏனென்றால் விலைவாசி கூடுதலாக
இருப்பதால் பணத்திற்கான மதிப்பு குறைவாக இருக்கும். எனவே 10 ரூபாய் கொடுத்து
வாங்கிய பொருள் தற்பொழுது 15
ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் இதைத்தான் பணவீக்கம் என்று
பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அப்படியானால் நாட்டில் விலைவாசி
கூடிக் கொண்டே செல்கிறது என்று தான் அர்த்தம். பொதுவாக தானியங்கள், காய்கறிகள், பழங்கள்
போன்ற அத்தியாவசிய தேவையான பொருட்களின் விலை உயர்வு தான் பணவீக்கம் ஏற்படுவதற்கு
காரணமாகிறது. இந்தியாவின் பண வீக்கம் ஆனது ஆறு சதவீதத்திற்கும் மேல்
உயர்ந்திருக்கிறது.
விலைவாசி தொடர்ந்து உயர்ந்து
கொண்டிருந்தால் மக்களுக்கு தேவையான அடிப்படைப் பொருட்களை வாங்குவதற்கு சிரமங்கள்
ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே விலைவாசி குறைந்தால் தான் பணவீக்கமும் குறையும்.
மக்களிடம் புழக்கத்தில் இருக்கும் பணத்தை கொண்டு தேவையான பொருட்களை அவர்களால்
வாங்க முடியும்.
பண வீக்கத்திற்கு காரணங்கள்
இந்தியாவின் பொருளாதாரம் பெரும்பாலும் கிராமங்களை நம்பியே இருக்கின்றது ஏனென்றால் கிராமங்களில் தான் உணவு உற்பத்திக்கு தேவையான விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. மேலும் பிற உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களும் கிராமங்களில் இருந்து தான் பெறப்படுகிறது. அதனால் ஒரு நாட்டின் உற்பத்திக்கு முதன்மையாக இருப்பது விவசாயம் தான். எனவே மழைப்பொழிவும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யக்கூடிய முக்கிய காரணியாகும். ஏனென்றால் போதுமான மலைப்பொழிவு இருக்கும் பட்சத்தில் தான் விளைச்சல் என்பது நன்றாக இருக்கும். அப்பொழுதுதான் உற்பத்தியாக கூடிய பொருட்கள் மக்களின் தேவைக்கேற்ப அதிகமாக கிடைக்கும். பொருட்கள் அதிகமாக கிடைக்கும் போது தான் நமக்கு விலைவாசியும் குறைகிறது.
மேலும் வாசிக்க: 2025 ஆண்டில் கால நிலையில் எதிர்கொள்ளப் போகும் சவால்கள்.



