இந்த காலகட்டத்தில் பலரும் ஹிட்டன் கேமராவை பயன்படுத்துவது சர்வ சாதாரணமாக போய்விட்டது. அலுவலங்களில் சில ரகசியமான இடங்களில் ஒருவரை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுப்பதற்காக இது போன்ற ரகசிய கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
Pen கேமரா, Button கேமரா போன்றவை ஒருவரை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுக்க பயன்படுகின்றன. அது மட்டுமல்லாமல் இது போன்ற ஹிட்டன் கேமராக்கள் தவறாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாம் செல்லும் இடங்கள், தங்கும் இடங்களில் உள்ள அறைகளில் இது போன்ற ரகசிய கேமராக்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நம்முடைய அலுவலகம் அல்லது வீடுகளில் கூட நமக்கு தெரியாமல் நம்மை பிறர் என்ன செய்கிறோம் என்று கண்டுபிடிப்பதற்காக இதுபோன்ற ரகசிய கேமராக்கள் பயன்படுத்தப்படலாம். இந்த ரகசிய கேமராவை கண்டுபிடிப்பதற்கு என்று சில Detectors இருக்கின்றன.
அந்த Detectors உதவி கொண்டு ரகசிய கேமராக்கள் எங்கு வைக்கப்பட்டிருந்தாலும் நாம் எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்தால் கூட இந்த ரகசிய கேமராக்களை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
இந்த Detector-ல் ஒரு சிறிய Antenna பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவி கொண்டு அந்த அறைக்குள் குறிப்பிட்ட தொலைவில் எங்கு இருந்தாலும் Hidden கேமராக்களை நம்மால் எளிதாக கண்டுபிடிக்க முடியும். Detector அந்த கேமரா அருகில் கொண்டு செல்லும்போது பீப் வென்ற ஓசை எழுகின்றது. மேலும் அதில் உள்ள LED செயல்படுத்த தொடங்குகிறது.
இதை வைத்து அந்த இடத்தில் நம்மால் தேடி ரகசிய கேமராவை கண்டுபிடித்து விட முடியும். ஒரு வேளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் மிகச்சிறியதாக இருந்தாலும் இந்த Detector கருவியில் ஒரு லென்ஸ் உள்ளது. அந்த லென்ஸின் வழியே பார்க்கும்போது மிகச்சிறிய எந்த ஒரு ரகசிய கேமராவையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும். வெளிச்சம் இல்லாத இடங்களில் கூட இந்த Detector உள்ள லைட் மூலம் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
