ரயிலில் கற்பூரம் மற்றும் விளக்கு ஏற்ற கூடாது மீறினால் சிறை தண்டனை.

பொதுவாக ரயிலில் பயணிப்பவர்கள் சில பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்கின்ற கட்டுப்பாடு இருந்து வருகிறது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களான பட்டாசு, சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் அமிலம் போன்ற பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.

அதேபோன்று சமீபத்தில் சில பக்தி பரவசமான பக்தர்களால் மேலும் சில பொருட்களை ரயிலில் பயணிப்பவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

பக்தர்கள் மாலை போடும் காலகட்டங்களில் மொத்தமாக சிறப்பு ரயில்கள் மற்றும் பிற ரயில்களில் பயணிப்பது வழக்கம். அவ்வாறு பயணிப்பவர்கள் கற்பூரம் ஏற்றி, விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துகிறார்கள். இதை அறிந்த ரயில்வே நிர்வாகம் இதுபோன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்தும் போது தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே விளக்கு மற்றும் கற்பூரம் பயன்படுத்த கூடாது என்று கூறியுள்ளார்கள்.

கற்பூரம் மற்றும் விளக்கு போன்ற எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை பயன்படுத்தினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ரயில்வே சட்டப்படி, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்கிறார்கள் தெற்கு ரயில்வே நிர்வாகத்தினர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை